காவல் செய்திகள்

புகார் அளிக்க சென்ற  இளம்  பொறியாளரிடம் உல்லாசத்திற்கு ஆசைப்பட்ட சென்னை விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

புகார் அளிக்க வந்த இளம் பெண்  பொறியாளரை உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்த விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ  ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.



சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கனடா நாட்டில் பொறியாளராக பணியாற்றும் நபரை காதலித்து வந்துள்ளார். அந்த பொறியாளர் சென்னை வந்தபோது,நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே கனடாவில் பொறியாளராக இருந்த காதலனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்ற உண்மை தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கனடா இன்ஜினியர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, சம்பவம் குறித்து

விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது

விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்
பெனிசீர் பேகம்

பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரணை நடத்தினார். அப்போது புகார் அளித்த பெண் இன்ஜினியருக்கு நியாயம் பெற்று தருவதாக கூறி அவரிடம் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளார். அதேபோல் வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி அது பெண் பொறியாளரை ஏமாற்றிய கனடாவில் உள்ள பொறியாளரிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

மேலும், பெண் பொறியாளரை ஏமாற்றிய பொறியாளர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க  நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறவும் பெனசீர் பேகம் உதவி செய்துள்ளார்.
இதன் மூலம் முன்ஜாமீன் பெற்ற பொறியாளர் சென்னையில் இருந்து கனடா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்த தகவல் பாதிக்கப்பட்ட பெண் பொறியாளருக்கு தெரியவந்த நிலையில், விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் பெனசீர் பேகத்திடம் நியாயம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. உடனே பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர் இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் மற்றும் ஆன்லைன் மூலம் பல லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த இணை கமிஷனர் தீஷா மிட்டல்

விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபு

விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பாதிக்கப்பட்ட பெண் இன்ஜினீயர் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பாலகிருஷ்ண பிரபுவை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, பெண் இன்ஜினீயர் வாட்ஸ் அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பிறகு அடிக்கடி தனது அலுவலகத்திற்கு விசாரணை என்ற பெயரில் பெண் இன்ஜினீயரை அழைத்து, அவரது தோளின் மீது கையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேநேரம் பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகம் மீதும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு ஒரு கட்டத்தில் பெண் இன்ஜினீயருக்கு

வாட்ஸ் அப்பில் ‘ நீ அழகாக இருக்கிறாய்…. உன்னை பார்த்ததில் இருந்தே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை…. நான் சொல்வதை நீ செய்தால்… நீ சொல்வதை நான் செய்கிறேன்…..’ என்று ஆபாசமாக பேசி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதனால் மனவேதனையும், அதிர்ர்ச்சியும் அடைந்த நிஷா, நேரடியாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து
விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண என்னை படுக்கைக்கு அழைத்து மெசேஜ் அனுப்புகிறார். நான் என்ன தான் செய்ய வேண்டும்?”  நான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்கு நியாயம் வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக விருகம்பாக்கம் காவல் உதவி ஆணையர் மற்றும் மகளிர் காவல் நிலைய பெண் சார்பு ஆய்வாளர் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி உயர் காவல் துறை அதிகாரிகள் உதவி கமிஷனர் மற்றும் உதவி பெண் ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்
புகார் அளிக்க வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற மகளிர் காவல் நிலைய பெண் எஸ்.ஐ. பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் பெற்றதாக 5-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button