மாவட்டச் செய்திகள்

பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ABDOஅதிரடி பணியிட மாற்றம்!??

சீர்காழி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியருடன் ABDO உல்லாசமாக இருந்ததை மறைக்கவே ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ் தொலைபேசியில் மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது!

சீர்காழி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது கொரோனா தடுப்பு ஊசி மையங்கள் அமைத்து கொள்ளிட ஊராட்சியில் உள்ள கிராம பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் தீவிரமாக கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கண்விநாயக நல்லூர், மற்றும் கடலோர மீனவ கிராமங்கள் புதுப்பட்டினம், கொடியம்பாளையம், திருமுல்லைவாசல் ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் JP என்ற ஜெயபிரகாஷ் அவர்கள் முழு முயற்சி செய்து உள்ளார் என்பது தான் நிதர்சனம்.

JP என்ற ஜெயப் பிரகாஷ் கொள்ளிடம் திமுக ஒன்றியச் சேர்மன்

ஏனென்றால் அந்த கிராம பொது மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை தடுப்பூசி போடப்பட்டுஅவர்களை திரும்பவும் அவர்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து மாவட்டத்திலேயே கொரோனா தடுப்பு ஊசி நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்ட ஜெயபிரகாஷ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான் ஒரு ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருந்தது. அதில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயபிரகாஷ் கொள்ளிடம் ஏபிடிஒவை தொலைபேசியில் சில விளக்கம் கேட்டு பேசும்போது அப்போது ஏ பி டி ஒ சரியாக பதில் சொல்லாமல் மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்று நீங்கள் செயல்பட்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை செய்ய வந்திருக்கும் நாங்கள் சும்மா இருக்க முடியாது என்றும் எங்களை நீங்கள் மதிக்காமல் எங்களிடம் ஆலோசனை செய்யாமல் ஊராட்சிகளில் பணிகள் மற்றும் பணியிட மாற்றம் போன்ற செயல்களை செய்து வருவது மக்கள் பிரதிநிதியை கோபத்தை
ஏற்படுத்தும் அளவுக்கு நீங்கள் செய்து வரும் செயலை மாற்றாவிட்டால் இது வேறு விதமாக சட்ட ஒழுங்குப் பிரச்சனை வரை கொண்டு செல்லும் என்றும் இதனால் காவல் நிலையம் செல்லும் அளவுக்கு போய்விடும் என்றும் சேர்மன் ஜெயபிரகாஷ் பேசிய ஆடியோ வலைதளங்களில் வந்தது. இது சம்பந்தமாக ஏ பி டி ஒ வை தொடர்புகொள்ள முடியவில்லை ஏனென்றால் அன்பரசன் கடந்த 07/12/21 அன்று மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின் அன்பரசன் பற்றி நாம் விசாரித்தபோது கடந்த கால அதிமுக ஆட்சியில் அன்பரசன் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் மேனேஜராக பணி செய்துள்ளார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு உடந்தையாக இவர் செயல்பட்டு வந்துள்ளதாகவும் அப்போது சீர்காழியில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றிய அலுவலங்களிலும் லஞ்ச ஊழல் கொடி கட்டி பறக்கின்றது என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது பத்திரிக்கை செய்தியில் வந்து கொண்டிருந்த நிலையில் அன்பரசன் ஒரு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதில் முக்கியமாக சத்துணவு ஊழியராக இருந்த ஒரு பெண்மணியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் புகார் கொடுத்தும் அதன்பின் அன்பரசன் மீது துறை ரீதியான விஜிலன்ஸ் விசாரணை நடத்திய பின் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அதன்பின் பணி செய்த இடங்களில் எல்லாம் அன்பரசன் மீது புகார் இருந்து வந்ததும் நமக்கு அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. இதையடுத்து 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இருந்த அதிகாரிகளை மாறுதல் செய்யும் போது கொள்ளிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் இருவருக்கும் பெரிய தொகையை அன்பளிப்பாக வழங்கி அன்பரசன் பணி உயர்வு பெற்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ABDO வாக வந்துள்ளார். அப்போது அன்பரசன் கொள்ளிட ஒன்றிய அலுவலகத்தில் பணி அமர்த்த கூடாது என்று பல சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஏனென்றால் கொள்ளிடம் ஒன்றியத்தில் மீனவ சமுதாயத்தினர் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு இதுபோன்ற குற்றம் சாட்டப்பட்ட அன்பரசன் அதிகாரியாக வந்தால் சாமானிய பொதுமக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் 40 ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள் என்றும் தகவல் வந்துள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அன்பரசன் கொள்ளிடம் ஒன்றியம் ஏ பி டி ஒ வாவாக தொடர்ந்து பணியாற்றினார்.

அலுவலத்தில் பணி செய்யும் பெண் ஊழியருடன் உல்லாசம்!!

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி செய்யும் (OA) பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளதாகவும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் ABDO அன்பரசனும் அந்த பெண் ஊழியரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகவும் . இதுபோன்று முகம் சுளிக்கும் அளவுக்கு அன்பரசன் ஒன்றிய அலுவலகத்தில் நடந்து கொண்டதை அங்கு பணி செய்யும் பல ஊழியர்களுக்கு தெரியவர இந்த செய்தியை ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ் அவர்களிடம் கூறியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே அன்பரசன் திமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் மற்றும் கொள்ளிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் அவர்களுக்கு ஆறு மாதமாக பெரிய தொகையாக கொடுத்து தப்பித்து வந்ததாகவும் தகவல் வந்துள்ளது.அதனால் தான்அன்பரசன் மீது வரும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தி அதிமுக திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆதரவாக பேசி வந்ததாகவும் தகவல் வந்துள்ளது.பல பஞ்சாயத்து அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னிச்சையாக பணியிட மாற்றம் செய்து பல லட்ச ரூபாய் லஞ்சமாக அன்பரசன் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது சம்பந்தமாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் விளக்கம் கேட்டதற்கு அன்பரசன் ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் வேலைகள் பற்றி கேட்டால் சரியான விளக்கத்தை தராமல் அவர் செய்த தவறை நியாயப்படுத்தி பேசி வருகிறார் என்றும்.தொடர்ந்து இதுபோல் யாரையும் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார் அன்பரசன் என்றும் கேட்கும் கேள்விகளுக்கு உண்மைக்குப் புறம்பாக பதில் சொல்வதால் நான் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு தொலைபேசியில் அன்பரசனிடம் ஆவேசமாக ஒரு சில வார்த்தைகளை தொலைபேசியில் பேசியது உண்மைதான் என்றும் அந்த தொலைபேசி உரையாடலை அன்பரசன் திமுக ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உதவியுடன் தன்னை நியாயப் படுத்தும் விதத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆடியோவை கேட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு அதிகாரியை ஒருவர் தொலைபேசியில் மிரட்டினால் அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு தொலைபேசி உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அரசுக்கும் திமுக கட்சிக்கும் தமிழக முதல்வரின் நற்பெயரை கலங்கப்படுத்தும் நோக்கத்துடன் தான் இந்த செயலை செய்துள்ளார் ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் என்று கூறுகின்றனர் .ஏனென்றால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கொள்ளிடம் திமுக ஒன்றிய செயலாளரை சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியை சரியாகச் செய்ய விடாமல் அதிமுக ஒன்றியச் செயலாளர் உடன்பாடு போட்டுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக கட்சிக்கு எதிராக கட்சியின் ஒன்றிய செயலாளர் நடந்து கொண்டுள்ளார் என்பதை மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக தலைமைக் கழகம் வரை கொண்டு சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு லஞ்சம் ஊழல் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருப்பதால் நடக்க இருக்கும் நகராட்சித் தேர்தலில் திமுக கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளை தாங்க முடியாத ஒரு சில அதிமுகவினர் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கவே இதுபோல் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் அதற்கு திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் கொள்ளிடம் திமுக ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனவாக இருக்கிறது .அந்தக் கனவை சிதைக்கும் நோக்கில் இதுபோன்ற கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கப்படுத்தும் அதிகாரிகளை நேர்மையான முறையில் விசாரணை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வாகும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும் !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button