சினிமா

போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் லியோ படத்தில் பாடிய நடிகர் விஜய் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை!

நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி 5 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பாடல்கள் அமைந்துள்ளதாகவும் அந்தப் பாடல்களை விஜயை பாடியதாகவும் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளார்.

அனுப்புநர்:-
சமூக ஆர்வலர் RTI.செல்வம்
த/பெ . ஏகாம்பரம்
நெ.349,ஜெ.ஜெ.நகர்,3வது தெரு
கொருக்குப்பேட்டை, சென்னை 600021
இமெயில்: e.selvam90@gmail.com
போன் : 9884049794

பெறுநர்:-
உயர்திரு காவல் ஆணையர் அவர்கள்
வேப்பேரி ,எழும்பூர், சென்னை -600003

அன்பார்ந்த, ஐயா, வணக்கம்:-
நான் சமூக ஆர்வலர் RTI.செல்வம். நாட்டின் நடக்க கூடிய நல்லவை, கெட்டவை அனைத்துக்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கண்டு வருகிறேன். தற்போது தமிழக அரசும், காவல்துறையும் போதை தடுப்பு விழிப்புணர்வு செய்து பல குற்ற செயல்களை தடுத்து வருகிறார்கள்.

போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், மேலும் ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் நா ரெடி பாடலின் ப்ரோமோ ஜூன் 22 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

இந்தப் பாடலை நடிகர் விஜய்யும், அனிருத்தும் பாடியிருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் என்ற வாசகத்தை ப்ரோமோவில் இடம் பெற செய்தது.

அண்ணன் நான் வரவா நான் ரெடியா இருக்கேன் தனியா வரவா என்ற பாடலில்
ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க சியர்ஸ் கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

பொகயல அறுவடைக்கு தயாரான  ஓப்பொனன்ட் அ களையெடுத்து தலவலிய போக்கிப்பது எங்க தலை எழுத்து

ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணில கட்டி லாரி ல ஏத்தி அர்த்துபோட அனுப்புடுவோம் ஃபேக்டரிக்கு
டேய்

எல்லா புளு பிரின்ட் உம் தெரியும் மிஷன் சக்சஸ் ஃபுல் ஆ முடியும் இடையே வந்த உனையும் படையல்
வெப்பேன் கொலசாமிக்கு

அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு கேங்ல இல்ல பொய் புரட்டு வெளயாட் போல
வேல நடத்தும் வேள்டு வைடு லிங்க்

ஏய் எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாகுதுடா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாரி சிங்க்

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட கெலிச்சி கெலிச்சி களச்சி போய்ட்டேன் பத்தவச்சு பொகய உட்டா பவர்

கிக் இன்
பொகயல பொகயல பவர் கிக்

இன்
மிளக தட்டி முட்டி குழம்புல கொத்திக்குது பார் அந்த கால் அழகு அடி தடி வெட்டு குத்து எங்க வீட்டு சமையல் வர அட கலந்திருக்கு
கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு
அது தான் கணக்கு

இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச்சு எனக்கு புரிதா உனக்கு

மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் டா மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பார்

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு கேட்டாலே அதிரும் பார் உனக்கு போஸ்டர் அடி அண்ணன் ரெடி கொண்டாடி கொளுத்தணும் டி

என்ற பாடல் வரிகளில் நடிகர் விஜய் இதுபோன்ற சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயல்களை இளைஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தில் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985 போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும் போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார்.
ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டி விடுதல் போன்ற குற்றத்திக்காக இந்திய தண்டனை சட்டத்தின் சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
சமூக ஆர்வலர் RTI.செல்வம்
தொடர்புக்கு 9884049794

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button