போன் போட்டால் போதும் 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தேடிவரும் நடமாடும் டாஸ்மாக் சர்வீஸ்!! அதிர்ச்சி தகவல்!250 ரூபாய்க்கு (compo) குவாட்டர் பாட்டில் 2.சைடிஸ் , ஒரு கப் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் .!! 24.மனி நேரமும் கொடி கட்டி பறக்கும் நடமாடும் டாஸ்மார்க் வியாபாரம். ! நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு மாதம் 5 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டும் புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர்!? நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
போன் போட்டால் போதும் 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு தேடிவரும் மொபைல் சர்வீஸ்!! ஒரு குவாட்டர் சரக்குக்கு ,2.சைடிஸ் , ஒரு கப் மற்றும் ஒரு வாட்டர் பாட்டில் ரூபாய் 250 .!! 24.மனி நேரமும் கொடி கட்டி பறக்கும் நடமாடும் டாஸ்மார்க் வியாபாரம். ! நீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்ட புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர்!? நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!?
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரிய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி சீருடைகளில் மது அருந்தும் காட்சிகள் இளைய சமுதாயத்தை சீரழித்து விடும் என்றும் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர் நீதி மன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு எச்சரிகை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலும் அதன் எதிர்புரம் சாந்த நாதபுரத்தில். 24 மணி நேரமும் சட்ட விரோதமாக வெட்ட வெளியில் மது பாட்டில் விற்பனை அமோகமாக நடப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் ,வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகம் சுழிக்கும் அளவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
புதுக்கோட்டை நகர் பகுதியில் மட்டும் 11. டாஸ்மாக் கடைகள் உள்ளன . இதில் அரசு அனுமதி பெறாமல் ஒரு சில தனி நபர்கள் சட்ட விரோதமாக மறைமுகமாகவும் மது கூடம் நடத்திமது பாட்டில் விற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சட்ட விதிமுறைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் கற்றில் பறக்க விடும் மது ஒழிப்பு காவல்துறைக்கு வாரம் + மாதம் கட்டவேண்டிய சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை கப்பம் கட்டிவருவதாகவும் தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளர் காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்ததின் அடிப்படையில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் மது பாட்டில் விற்பனை செய்யும் நபர்கள் மீது
பெயருக்கு மாதம் அல்லது இரண்டு மதத்திற்க்கு ஒரு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் மது விலக்கு காவல்துறையினர் கண் துடைப்பு நாடகம் நடத்தி நீதிமன்றங்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாநகரில் உள்ள மதுவிலக்கு காவல்துறையினர் மற்றும் காவல் நிலைய
ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அனைவருக்கும் டைம் டேபிள் அடிப்படையில் கப்பம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இரவில் டாஸ்மாக் கடை கள் 10 மணிக்கு மூடிய பின்பு மறுநாள் காலை டாஸ்மாக் கடை திறக்கும் வரை எந்த நேரமும் புதிய பேருந்துநிலையத்தில் உள்ள டி. கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் ரெகுலர் கஷ்டமர்களுக்கு சைடிஸ் உடன் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் பேருந்து நிலையத்தின் எதிர்புரத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில். இரவு டாஸ்மார்க் கடை மூடிய பின்பு மறுநாள் காலை டாஸ்மார்க் கடை திறக்கும் வரை சட்டவிரோதமாக மது விற்பனையை தொடர்ந்து நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிலும் முக்கியமாக அதிகாலையில் மது வியபாரம் சூடுபிடிக்கும் என்கின்றார்ள் குடிமகன்கள்.
இதை பற்றி நமது நிருபர் கல அய்வில் இரங்கியபோது, இரவு நேரத்தில் அதிக அளவில் மது குடித்துவிட்டு மறுநாள் காலையில் எழும் பொழுது குடி மகன்களுக்கு தலவலி மற்றும் உடல் சேர்வு ஏற்பட்டு கை கால் நடுக்கம் எற்படுவதால் அதிகாலையில் அதைப் போக்க மிண்டும் மது வாங்கி குடித்த பின்பு தான் கை கால் நடுக்கம் நிற்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
அரசு அறிவித்த டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கபடுவதால் அதுவரை காத்திருக்க முடியவில்லை என்கின்றர்கள் மதுவுக்கு அடிமையான மதுப் பிரியர்கள்.
இதுமட்டுமின்றி தற்போது நடமாடும் டாஸ்மாக் ( மொபைல் சர்வீஸ்) மது விற்பனை நடப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் . இதைக் கேட்டு
அதிர்ந்து பேன நாம் விசரனையை மேலே தொடங்கினோம்.
திருக்கோகர்ணம் பகுதியில் அதிகாலை முன்று மணிக்கு நடமாடும் மது விற்பனை செய்பாவர்கள் ரகசியமாக காவல்துறைக்கு கட்டவேண்டியதை கட்டிவிட்டு அமோகமாக மது பாட்டில் விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மொபைல் சர்வீஸ் நடமாடும் மது பாட்டில் விற்பனை டாஸ்மாக் கடை சேல்ஸ்மேன் உடந்தையுடன் நடக்கிறதாம். அது மட்டும் இல்லாமல்
வாடிக்கையாளர்களுக்கு
மட்டும் டாஸ்மாக் சேல்ஸ்மேன் தொலைபேசி நம்பர் தெரியுமாம் .மற்றவர்களுக்கு வெளிபடையாக அலைபேசி என் கொடுக்கபடுவதில்லை என்கின்றார்கள்.
இந்த நடமாடும் மொபைல் சர்வீஸ் மது பாட்டில் விற்பனை யார் தலைமையில் நடக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.இப்பகுதியில் பாடும் கருப்பு குயிலின் (ஒலி ஒளி அமைப்பாளர்) தொலைபேசி நம்பருக்கு அழைப்பு விடுத்தால் போதும் அழைத்தவர்கள் இருக்கும் இடத்திற்க்கே குயில் பாடிக் கொண்டு பறந்து வருமாம் .
நீங்கள் கேட்கும் மது பாட்டிலுடன் சைடிஸ் உடன் மதுவும் ஊறுகாய் கப் சைடிஸ் மற்றும் வாட்டர் பாட்டிலுடன் ரூபாய் 250 க்கு இருக்கும் இடத்திற்கே டோர் டெலிவரி மொபைல் சர்வீஸ் செய்யபடுவதாக கூறினார்கள். அது என்ன பாடும் குயில் என்று நாம் கேட்டபோது இது குடிவெறியர்கள் பயன்படுத்தும் ரகசிய வார்தை என்கின்றார்கள் .
இதேபோன்று புதுகை நகரம் முழுவதும் பல இடங்களில் நடமாடும் டாஸ்மார்க் மொபைல் சர்வீஸ் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர் .
மது குடித்த இளைஞர்களுக்கு சமீப காலமாக மஞ்சக்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சோகமும் நடந்துள்ளதாக திருக்கோரணம்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக திருக்கோகர்ணம் பகுதியில் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான இளைஞர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் நிலவி வருவதாகவும் இதனால் இளம் பெண்கள் விதவையாகும் நிலமை அதிகரித்து கொண்டே போவதாகவும் இவர்களது பிள்ளைகள் தந்தை இல்லாமல் தவித்து வருவதாகவும் கண்ணிருடன் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்து உள்ளது என்றும்தெரிவித்தர்கள். இந்த கொடூர விபரீதங்களை கண்டும் காணாமல் கல்லா கட்டுவது மட்டுமே தங்களது அஜந்தா வாக வைத்திருக்கும் திருக்கோரணம் காவல் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது கேப்டனாக சிவப்பு கட்டிடத்தில் உலாவரும் கருப்பு ஆடு தலைமையில் என்றும் எந்த காவல் நிலையத்திற்கு எவ்வளவு, ஆய்வாளர்களுக்கு எவ்வளவு கப்பம் கட்டவேண்டும் என்று திர்மானிப்பாரம். இந்த நடமாடும் டாஸ்மாக் வியாபாரம் பற்றி வெளியில் தெரியமல் ரகசியம் காக்கப்பட்டு வருவதாக கூறினார்கள். காவல்துறையின் மேலிடத்திற்க்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதற்காக ரகசிய காவல்துறை ஒற்றர்களுக்கும் கப்பம் செல்லவேண்டிய தேதியில் சரியாக சென்றடைவதால். நடமாடும் டாஸ்மார்க் மொபைல் சர்வீஸ் வெளியே கசிய விடாமல் இருக்கின்றதாக நல் உள்ளம் கொண்டவர்கள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க கோரிய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி சீருடைகள் மது அருந்தும் காட்சிகள் சமுதாயத்தை சீரழி க்கிறது என்றும் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு எச்சரிகை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை நகரத்தில் சட்ட விரோதமாக நடக்கும் மொபைல் சர்வீஸ் மது பாட்டில் விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சித் துறை & காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை
பெருத்திருந்து பார்ப்போம்.