காவல் செய்திகள்

போலியான அரசு பணி ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கண்டுகொள்ளாத விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை !??

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் தேர்வு எழுதிய வெண்ணிலா என்ற பெண்மணியிடம் விவேகானந்த ராஜ் என்பவர் பூமி என்பவர் மூலம் விஏஓ வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் ஆகும் என்றும் முதல் தவணையாக 2 லட்சமும் பணி ஆணை வந்தவுடன் மீதித் தொகையை 3 லட்சமும் கொடுக்க வேண்டும் என்று பேசி 2 லட்சம் முன்பணம் அந்தப் வெண்மணி வட்டிக்கு பணத்தை வாங்கி வந்து பூமியிடம் கொடுத்துள்ளார்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு
திருநெல்வேலி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியில் 14/08/19 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சேர்வதற்கானஅரசு பணி ஆணை நியமன உத்தரவை கையில் எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பூமி என்பவர் மற்றும் விவேகானந்தராஜ் ஆகிய 2 பேரும் வெண்ணிலா என்ற பெண்மணியிடம் சந்தித்து தனது போலி அரசு பணி ஆணை உத்தரவை வழங்கி மீதமுள்ள மூன்று லட்சத்தை கேட்டுள்ளனர் அப்போது அந்தப் பெண்மணி இரண்டு லட்ச ரூபாய் இருப்பதாகவும் ஒரு லட்ச ரூபாய் பணியில் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
உடனே அரசுபணி ஆணைபணி உத்தரவைக் கொண்டு வந்த பூமி மற்றும் விவேகானந்தராஜ் இரண்டு பேரும் போலி அரசு பணிஆணை உத்தரவின் நகலை மட்டும் கொடுத்து சென்றுள்ளனர். அதன்பின் இரண்டு நாள் கழித்து வெண்ணிலா என்ற பெண்மணிக்கு தொலைபேசியில் பணியை உத்தரவில் கால் டிக்கெட் நம்பர் தவறாக உள்ளது அதை சரி செய்து வேறு உத்தரவு வரும் என்றும். கூறியுள்ளனர். அதை நம்பி அந்தப் பெண்மணி ஒரு வருடமாக காத்திருந்து உள்ளார். புது அரசு பணி ஆணை உத்தரவு எதுவும் வரவில்லை அதுமட்டுமில்லாமல் வாங்கிய நான்கு லட்சத்தையும் இவர்கள் திருப்பித் தரவில்லை என்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்களை சந்தித்து 05/06/20 அன்று புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார் .உடனே மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ப்விஜயகுமார்புகார் மனு சிஎஸ்ஆர் கொடுத்து அனுப்பி சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர் அந்த நேரம் கொரோனா கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதால் பூமியை சரியாக விசாரிக்க முடியாமல் பணத்தை கொடுக்குமாறு அப்போதெல்லாம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். பூமிநாதன் பணம் பெற்று கொண்டதை ஒத்துக் கொண்டு இரண்டு மூன்று தவணையாக வாங்கிய 4 லட்ச ரூபாய் பணத்தை தந்து விடுகிறேன் என்று குற்றப் பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் எழுதி கொடுத்து சென்றுள்ளார். அதன்பின் ஒருமுறை மட்டும் சொன்ன தேதிக்கு 90 ஆயிரம் மட்டும் பூமிநாதன் வெண்ணிலா வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் . அதன்பின்vnr dcp dsp விஜயகுமார் பணிமாறுதல் சென்றுவிட்டார்.அதன்பின்காவல் ஆய்வாளர் அவர்கள் பொறுப்பை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் மீதம் 3 லட்சத்து 10 ஆயிரத்தை பூமி கொடுக்காமல் காவல்துறையில் உள்ள ஒருசில அதிகாரிகளின் உதவியுடன் ஏமாற்றி வருவதாக தகவல் வந்துள்ளது.
பலமுறை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று எந்த வித ஒரு நல்ல முடிவையும் அவர்கள் சொல்லவில்லை என்ற தகவலும் வந்துள்ளது மோசடி செய்த பூமி நாதனுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக காவல்துறையினர் நடந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

இது போன்ற போலி அரசு ஆணை உத்தரவைப் பொறுத்து பல பேரிடம் பல லட்சங்கள் பூமி வாங்கியுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்துள்ளது. ஆனால் காவல் துறையில் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை என்றும் அவர் மீண்டும் இதுபோன்ற பண மோசடி வேலைகள் செய்து வருவதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு கைக்குழந்தை உள்ளது.
தன் கணவரும் வெளிநாட்டிலிருந்து வந்து கொரோனா கட்டுப்பாட்டினால் போக முடியாமல் எந்த வேலையும் இன்றி இருப்பதால் தொழிலும் இல்லாமல் கடன் வாங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் குடும்பத்தில் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தயவுசெய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மோசடி செய்த பூமிநாதன் இடம் பணத்தை பெற்று கொடுக்குமாறும் தவறான அரசாணையை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட அதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகும். ஆகவே மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக இதுபோல் மோசடியில் ஈடுபட்ட நபர்களை விசாரணை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இதுபோன்ற மோசடிகள் தமிழகம் முழுவதும் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி நடந்து கொண்டேதான் இருக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் வந்து கொண்டே உள்ளன என்ற தகவல் வந்துள்ளது . இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நேரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button