மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக கட்சி சார்பாக எம்ஜிஆர் 34 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது!
இன்று தமிழக முழுவதும் அதிமுக கட்சி சார்பில் எம்.ஜி.ஆர் 34 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சியின் நிர்வாகிகள் அந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் அதேபோல
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கட்சி சார்பாக எம்.ஜி.ஆர்.34ஆண்டு நினைவுநாள் சந்தை பாலம் அருகில் வணிக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் பொறுப்பாளர் சோனை தலைமை தாங்கினார். பேரூர் துணை செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர்செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் நேரு கோவிந்தசாமி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா அவர்கள் எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலைஅணிவித்து மலர்துதூவி மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் நிர்வாகிகள் கோட்டையன், சீனி, மருதமுத்து, பாலன், சரவணன், வில்லி, பிரேம், சங்கு, ராஜேந்திரன், பாண்டி, ரெங்கராஜ், அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் கூட்டுறவுசங்க தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.
.
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பஸ்நிலையத்தில் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஒன்றியசெயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலிசெலுத்தினார். பாசறை மாவட்டஇணைசெயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பாலன் வரவேற்றார். மற்றும் பரந்தாமன், ஜெயராமன், பாண்டியன், முத்துசாமி, மலைசச்சாமி, வீரபாகு, குழந்தை உள்பட திமுக கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.பரவை பேரூர் அ.தி.மு.க. சார்பாக பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் ராஜா தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினார். இதில் சௌந்தரபாண்டியன், நாகமலை, தங்கவேல், முத்துபாண்டி, ஆதவன், ராஜு, ஜெயராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர். விராலிப்பட்டியில் கிளைசெயலாளர்கள் நடராஜன், பெரியகருப்பன் தலைமையிலும், 3வதுவார்டு தாதம்பட்டி மந்தையில் வார்டு செயலாளர் முன்னாள் கவுன்சிலர் திருப்பதி தலைமையிலும் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.