காவல் செய்திகள்

மதுரை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று விற்ற அதிர்ச்சி சம்பவம்!

குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் குற்றம் செய்ய அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கொண்டு வந்து அந்த வழக்கில் இந்த வாகனத்தையும் சேர்த்து விடுவார்கள். அதன் பின்பு அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து விடுவார்கள். அதன் பின்பு சிறையில் தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்க வேண்டும்.

வாடிப்பட்டி
காவல் நிலையம்
மதுரை மாவட்டம்


2020 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் டி. வாடிப்பட்டி தாலுகா கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் குற்றம் செய்ததாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் அவர் மீது அப்போது இருந்த காவல் ஆய்வாளர் ஷில்வியா ஜாஸ்மின் வழக்கு பதிவு செய்து குற்றம் செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வாடிப்பட்டி காவல்
நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அதேபோல் வாடிப்பட்டி தாலுகா வடுகபட்டியைச் சேர்ந்த ஒரு நபர் குற்றம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட குற்றம் செய்ய பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து செய்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். 15 மாதங்களுக்கு பின்பு
வடுகபட்டியைச் சேர்ந்த நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திலிருந்து வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது வாடிப்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த கனக சபை அவர்கள் அந்த நபரின் வாகனத்தை கொடுத்து விடுமாறு கூறியுள்ளார். அப்போது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்த காவலர் அந்த நபரை அழைத்து எது உன்னுடைய வாகனம் என்று கேட்டுள்ளார் அந்த நபரும் அங்கு நின்ற ஒரு வாகனத்தை காண்பித்து இதுதான் என்று கூறியிருக்கிறார் உடனே அந்த காவலர் வாகனத்தை எடுத்துச் செல்லும்படி 3000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சென்று விட்டதாக அந்த நபர் காவல்துறையினரிடம் விசாரணையில் கூறியதாக தகவல். அதன் பின்பு அந்த நபர் அந்த வாகனத்தை எடுத்துச் சென்று விட்டார். ஆனால் அந்த நபர் காண்பித்த வாகனம் போல் மற்றொரு இரு சக்கர வாகனம் காவல் நிலையத்தில் இருந்துள்ளது அந்த வாகனம் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட கச்சகட்டியைச் சேர்ந்த நபரின் வாகனம் ஆகும்.வடுகபட்டி சேர்ந்த நபர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளார். வாகனத்தை திருடி செல்கிறார் என்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு தெரியாது. காவல் நிலையத்தில் இருந்து வாகனத்தை எடுத்துச் சென்ற போது விசாரிக்கவும் இல்லை. ஏனென்றால் அந்த வாகனம் குற்ற வழக்ககில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆகையால் அந்த நபர் சர்வ சாதாரணமாக இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இது ஒரு மாதங்களுக்கு முன்பு குற்றவாளிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்ட கச்சை கட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் தென் மண்டல ஐஜி இடம் ஒரு மனு கொடுத்துள்ளார் அதில். 2020 இல் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டு சிறையில் இருந்து தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்து விட்டேன். ஆகையால் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இருக்கும் என்னுடைய இரு சக்கர வாகனத்தை வழங்குமாறு அந்த மனுவில் கேட்டுள்ளார்.
உடனே தென்மண்டல ஐஜி அவர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இருக்கும் வாகனத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் பின்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்து இருக்கும் இடத்தில் பார்க்கும் பொழுது வாகனம் அங்கு இல்லை என்பதை கண்டு அந்த நபர் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அப்போதுதான் தெரிகிறது அந்த இருசக்கர வாகனம் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்று . அதன் பின்பு தற்போது காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள முத்து அவர்கள் அந்த வாகனம் எங்கு இருக்கிறது என்று தனிப்படை அமைத்து தேட சொல்லியுள்ளார். தனிப்படை காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை தேடிவந்த நிலையில் அந்த வாகனம் வாடிப்பட்டியில் ஒரு நபர் அந்த வாகனத்தை பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது அதன் பின்பு அந்த நபரை பிடித்து விசாரித்த போது அந்த நபர் சொன்னது காவல்துறைக்கு அதிர்ச்சி அளித்தது.


வடுகபட்டியை சேர்ந்த நபர் 2021 ஆம் ஆண்டு என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு வாகனத்தை விற்றதாக கூறியுள்ளார். வடுகபட்டியைச் சேர்ந்த அந்த நபரை
காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது வாகனத்தை திருடிச் சென்று விற்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அந்த வாகனத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர் வாகனத்தை திருடிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எது எப்படியோ காவல் நிலையத்தில் நின்றிருந்த வாகனத்தையே திருடிச் சென்று விற்ற செய்தி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஆகவே காவல் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button