மது போதையில் குளத்திற்குள் சிக்கிக்கொண்ட நண்பரை காப்பற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகர் சேர்ந்தவர்களான தௌபிக் , முகமது அமிர் , தமீம் மூன்று பேரும் நண்பர்கள் . பழனியில் இருக்கும் வையாபுரி குளத்தின் கரையில் அமர்ந்து மூன்று பேரும் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தௌபிக் என்பவர் மீனவர்கள் மீன் பிடிக்கும் பரிசலை கரையில் வைத்திருந்தனர்.
இதனை தௌபிக் எடுத்துக்கொண்டு மதுபோதையில் பரிசலில் குளத்திற்குள் சென்றுள்ளார் .
சிறிது தூரத்திலேயே காற்றின் வேகம் அதிகரித்ததால் பரிசிலை கட்டுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறி பரிசல் கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கும் நிலையில் தனது நண்பர்கள் ஆன அமீர் மற்றும் தமிம் ஆகியோரை காப்பாற்றுவதற்கு அழைத்துள்ளார். இருவரும் உடனடியாக தௌபிக்ஐ காப்பாற்றுவதற்காக நீச்சல் அடித்து குளத்திற்குள் சென்றுள்ளனர். சிறிது தூரத்தில் தண்ணீரில் உள்ள சேற்றில் அமீர் சிக்கி உள்ளார் , நீச்சல் அடித்துக் கொண்டு வந்த சக நண்பரை காணததால் தமிம் , பயத்தில் கரைக்கு திரும்பி உள்ளார். பரிசலில் அமர்ந்திருந்த தௌபிக் காற்றின் வேகத்தில் மறுக்கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தமீம் அருகில் இருந்தவர்களை அழைத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ,காவல்துறையினர் இணைந்து அமீரை தேடும்போது அமீர் இறந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்து மீட்க்கப்பட்டார் . இதனை அடுத்து மறுக்கரைக்கு அடித்து செல்லப்பட்ட தௌபிக் மீனவர்கள் காப்பாற்றி உள்ளனர். மேலும் இறந்த அமீரின் உடலை போலீசார் கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து பழனி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வையாபுரி குளத்தின் தவித்த நண்பரை காப்பற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையின் பெய்து வரும் மழை காரணமாக வரதமா நதி அணை முழு கொள்ளளவு எட்டி வெளியேற்றப்படும் தண்ணீர் ஆனது வையாபுரி குளம் 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட வையாபுரி குளம் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.