மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மயங்கி மாடியிலிருந்து விழுந்ததாக நாடகமாடிய கணவன் கைது!
வீட்டில் மனைவி அருகில் இருக்கும் போதே நிர்வாணத்துடன் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்த கணவன்.
பெண்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் செல்போனில் இருந்ததைத்தட்டி கேட்ட மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார் சைக்கோ கணவன்.
புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த வினோத் என்பவருக்கு ஹேமா என்ற மனைவி மற்றும் 6வயது குழந்தை உள்ளது.
2015ஆம் ஆண்டு வினோத் -ஹேமாவதிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்திருக்கிறது
. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார்.
திருமணம் நடந்த ஆறு மாதத்திலிருந்து கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரச்சனை அதிகமானதால் காவல் நிலையம் சென்றுள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் இருவரையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் நீதி மன்றம் வரை சென்று விவகாரத்து கேட்டுள்ளனர். அதன் பின் நீதிமன்றம் குழந்தைக்கும் தாயுக்கும் ஜிவானம்சம் கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .
ஐந்து மாதத்திற்கு முன்பு
வினோத் மற்றும் தன் பெற்றோர்கள் மனைவி ஹேமா விடம் ஆசை வார்த்தை கூறி வினோத் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகும் வினோத் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த ஹேமாவதி கனவன் செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார் .அப்போது பல பெண்களுடன் கணவன் இருக்கும் புகைப்படங்கள் இருந்திருக்கின்றன. இதுகுறித்து கணவனிடம் கேட்ட போது அது தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது.
பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு தெரிந்து விட்டதால் மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்த பெண்களுடன் அரை நிர்வாணத்துடன் வீடியோ காலில் பேசி வந்திருக்கிறார் வினோத்.
இதைப் பற்றி வினோத் பெற்றோர்களிடம் ஹேமா சொல்லியும் அவர்கள் வினோத்துக்கு சாதகமாக இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் தான் நேற்று இரவு மனைவி ஹேமா கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் வினோத்.
இதை மறைக்க வினோத் ஹேமாவதி மாடியில் இருந்து மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஹேமாவதி அண்ணன் விரைந்து வந்து தங்கையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்ட நிலையில் சந்தேகமடைந்த ஹேமாவின் சகோதரர் கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வினோத்தை அழைத்து விசாரணை செய்ததில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அதன் பின்
கீழ்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். கொலை என்ற காரணத்தினால் ஆர்டிஓ விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணை முடிந்தவுடன் பிரேத பரிசோதனை செய்து உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க போவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
ஆறு வயது குழந்தையை எங்கே என்று காவல்துறையினர் வினோத்திடம் கேட்டபோது தெரியாது என்றும் கூறியுள்ளார் ஆனால் குழந்தையை அருகில் எங்கேயோ விட்டுச் சென்று நாடகமாடி உள்ளனர் அதன்பின் குழந்தை அருகில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
அதன்பின் இறந்த ஹேமா சகோதரர் கூறுகையில் திருமணம் நடக்கும் முன்பே வினோத் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் வினோத் திருமணம் செய்த பின்பு ஹேமாவிடம் பணம் கேட்டுதகராறு செய்து வந்தார் என்றும், ஹேமாவதியை சமாதானம் செய்து கணவருடன் வாழ சொன்னேன் என்றும்
ஆனால் அதன் பின்பும் வினோத் திருந்தாமல் அவருடைய பெற்றோர்களுடன் சேர்ந்து என் தங்கையை கொலை செய்துவிட்டான் என்றும் வினோத் மற்றும் அவர் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.