போக்சோ வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒரு வருடத்திற்குள்
17 வயதுடைய மற்றொரு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய காமக் கொடூரன் கைது!

திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த



இளைஞர் ஆறுமுகம் (25) , அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பழனி நெய்க்காரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன் பின்னர்.பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று விசாரணை செய்த காவல்துறையினர் ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதே நபர் ஓர் ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே வேறொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளான். தற்போது மீண்டும் ஒரு சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!





