மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி!
கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!
உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி
மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் !கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!
சிறு தொழில் செய்வதற்கு வங்கியில் கடன் உதவி கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வேலூர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். வேலூர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் உள்ள அதிகாரி மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த மனுவை பெற்றுக் கொண்டு வங்கியில் கடன் பெற்றுத் தராமல் உதாசனப் படுத்தி வந்ததும் இல்லாமல் பலமுறை அலுவலகத்திற்கு அலையவைத்து அலட்சியப் போக்கை கடைபிடித்துள்ளார். அதன் பின்பு பெண் மாற்றுத்திறனாளி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்துள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அங்கு நின்றிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனுவை கேட்டு வாங்கிக்கொண்டு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு எனக்குத் தொழில் செய்ய வங்கியில் கடன் உதவி வேண்டும் என்றும் பல முறை மனு கொடுத்தேன் இதுவரை எனக்கு வங்கிக் கடன் கிடைக்க மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளி பெண் உடனே எந்த அதிகாரி என்ற மாவட்ட ஆட்சியர் கேட்டுள்ளார் .
அருகில் நின்றிருந்த அதிகாரியை காட்டி அவர்தான் என் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மாற்றுத்திறனாளி பெண் கூறியவுடன் கோபத்தின் உச்சிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர்
உடனே சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை மாவட்ட ஆட்சியர் அழைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அருகில் வந்த அந்த அதிகாரியை பார்த்து வாங்கும் சம்பளத்திற்கு ஏதாவது வேலை செய்யுங்கள்.மாற்றுத்திறனாளிகள்கொடுக்கும் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்று நடந்து கொண்டால் சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்றும் அந்த மாற்றுத்திறனாளி பெண் கேட்கும் உதவியை செய்து கொடுத்து விட்டு என்னை வந்து பாருங்கள் என்று அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்.
உடனே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சென்று கூனிக்குறுகி கும்பிடு போட்டு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நின்றிருந்ததை கண்ட மற்ற அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த அனைவரிடமும் மரியாதையாக குறைகளை கேட்கத் தொடங்கினர்.
அதன் பின்பு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் விசாரித்ததை மாவட்ட ஆட்சியரிடம் அந்த அதிகாரி விளக்கம் அளித்தார் இந்த சம்பவம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்கள் குறித்து 94980-35000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து தங்கள் குறைகள் மற்றும் புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம்” என்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.