கழிப்பறை இல்லாத காவல் நிலையத்திற்கு முதல்வர் விருது !உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் பெண் காவலர்கள் கழிப்பறைக்கு போராடும் அவல நிலை!?
ஒரு கழிப்பறையை பயன்படுத்துவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல காவல் தலைவர் நடவடிக்கை எடுப்பார்களா!?
மதுரை மாவட்டம்
மதுரை தேனி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது உசிலம்பட்டி.
இங்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம்
உசிலம்பட்டி புறநகர் காவல் நிலையம்
உசிலம்பட்டி நகர் காவல் நிலையம்
என்று உள்ளது
பெரும்பாலும் உசிலம்பட்டி நகரில் பல குற்றச் செயல்கள் மற்றும் முன்விரோத தொடர் மோதல் சம்பவங்கள் நடக்கும் பகுதியாகும்.
(மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரித்து, விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையமாக விருதுக்கு தேர்வாகி விருதினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளர், விஜயபாஸ்கர் அவர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் உசிலம்பட்டியில் அடிக்கடி சாலை மறியல் நடப்பது சகஜம் அப்படி சாரி மறியல் செய்யும் போது அசம்பாவிதங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை நடக்காமல் இருக்க அதிகமான காவலர்கள் பாணியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். மற்ற காவல் நிலையங்களை விட உசிலம்பட்டி நகர் காவல் நிலையங்களுக்கு தினந்தோறும் புகார் கொடுக்க பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் எப்போதுமே உசிலம்பட்டி காவல் நிலையத்தில் மற்ற காவல் நிலையங்களை விட அதிகமான காவலர்கள் எப்போதும் அங்கு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
காவல் நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆண் பெண் காவலர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தக் காவல் நிலையம் மிகப் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் மழை பெய்தால் காவல் நிலையத்திற்குள் மழைத் தண்ணீர் வரும் என்றும் அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் முக்கியமான பைல்களில் சேதம் அடைந்து விடுவதாகவும் காவல் நிலைய எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பழைய கட்டிட காவல் நிலையத்தில் காவலர்கள் பயன்படுத்தும் கழிவறையை பார்த்தாலே உள்ளே செல்ல மனம் வராது அந்த அளவிற்கு தான் அந்த கழிப்பறை உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதி பல வருடங்களாக இல்லாத காரணத்தினால் பெண் காவலர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . இதேபோல் வெளியூரிலிருந்து உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு பணிக்கு வரும் காவலர்கள் மதிய வேளையில் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வறை இல்லாமல் மன உளைச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் கழிப்பறை ஒன்று தான் உள்ளது. இந்த கழிப்பறையில் ஆய்வாளர் முதல் குற்றவாளிகள் ஆண் பெண் காவலர்கள். என அனைவரும் ஒரே கழிப்பறையை தான் பயன்படுத்த வேண்டும் . புகார் மீது விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஆண் பெண் கைதிகள் ஒரே கழிவறைக்கு தான் செல்ல வேண்டும் .ஆகையால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பெண் காவலர்கள் இதனால் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக காவல் உயர் அதிகாரிக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை ஓய்வறை கழிப்பறை கட்ட உத்தரவு போடாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பணியில் இருக்கும் காவலர்கள் புலம்பி வருகின்றனர். ஆகையால் இது சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் தென் மண்டல காவல் தலைவர் (ஐஜி) அவர்கள் காவலர்களின் நலன் கருதி கழிப்பறை மற்றும் காவலர்களுக்கு ஓய்வெடுக்க தனி அறை புதிதாக கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கி ஆணையிட வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இதையறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல காவல் தலைவர் அவர்கள் காவலர்களின் அன்பான கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவார்கள் எந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட உசிலம்பட்டி நகர் காவல் நிலைய பெண் காவலர்கள்!