மாவட்டச் செய்திகள்

மூன்று சிறுவர்கள் மாயம்! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட காவல்துறை! மீட்டெடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!!

மத்திய பிரதேசத்தில் வேலை இருப்பதாக   சென்ற  மலைவாழ் பழங்குடியின  சிறுவர்கள் மூன்று பேர் மாயம்!
தங்கள் குழந்தைகளை  மீட்டுத் தரும்படி   தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க சிறுவர்களின் பெற்றோர்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் தெப்பம்பட்டி சிற்றூரில் அமைந்துள்ளது. மலையில் 300 படிகளை கடந்து சென்றால் வேலப்பர் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது. இதனால் இக்கோயில் ”மாவூற்று வேலப்பர் கோயில்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் அருகாமையில் உள்ள கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஐந்து மாதத்திற்கு முன்பு உங்கள் கிராமத்திற்கு வந்த உசிலம்பட்டியை சேர்ந்த காசி பிரபு இரண்டு பேரும்
இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை சேர்ந்த‌ சீனி ,வேல்முருகன், ரவி ஆகிய மூன்று பேர்களிடம்
சந்தித்து  நாங்கள் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் வேலை செய்து வருவதாகவும் அங்கு இட்லி கடைக்கு வேலைக்கு சிறுவர்கள் தேவை  என்று கூறியுள்ளார்கள். இதை நம்பிய மூன்று பேரும் தங்களது  பிள்ளைகளுக்கு வயது குறைவாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக மகன்களை வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார்கள் . உடனே காசி பிரபு இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இரண்டு பேரும் சீனி என்பவரின் மகன் பட்டவராண்டி வயது (16), அழைத்துச் செல்ல 6000 ரூபாய் வேல்முருகன் என்பவரின் மகன் ஞானவேல் வயது (15), என்பவரை அழைத்துச் செல்ல 15,000  ரவி என்பவரின் மகன் தமிழரசன் வயது (14)  என்பவரை அழைத்துச் செல்ல பத்தாயிரம் கொடுத்துள்ளனர் அதன் பின்பு மூன்று சிறுவர்களையும்  மத்திய பிரதேசம் மாநில இந்தூர் பகுதிக்கு  அழைத்துச் செல்வதாக மூன்று சிறுவர்களின் பெற்றோர்களிடம் கூறிவிட்டு காசியும் பிரபு அழைத்துச் சென்றுள்ளனர்
வேலைக்குச் சென்றதிலிருந்து மூன்று சிறுவர்களும்  பெற்றோர்களிடம்  தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர்.
இந்த நிலையில் மே மாதம் முதல் கடந்த 15 நாட்களாக சிறுவர்கள் மூன்று பேரும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிகிறது.

வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் வேலையை விட்டு சென்று விட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிறது என்றும்
அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.
உடனே மூன்று சிறுவர்களின்  பெற்றோர்கள் ஆண்டிபட்டி காவல் உட்கோட்டம் ராஜதானி காவல் நிலையத்தில் தங்களது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் மூன்று சிறுவர்களை அழைத்துச் சென்ற காசி பிரபு இருவர் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக  1705/2023 புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த ராஜதானி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இதுவரை சிறுவர்கள் மாயமான புகார் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற கவலையில் வேறு வழியில்லாமல் மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள்
தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியரிடம்  கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்த மலைவாழ் பழங்குடியின மக்களின் சிறுவர்கள் மாயமானதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வருவதாக பரமேஸ்வரன் ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட துணைச் செயலாளர் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிறுவர்களை உடனடியாக மீட்டு தர கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இல்லையென்றால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் வறுமையில் இருப்பதை தெரிந்து கொண்டு ஒரு சில மோசடி நபர்கள் நூதன முறையில் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மிக குறைவான பணத்தை கொடுத்து தங்களது பிள்ளைகளை வேலைக்கு அழைத்து சென்று வடமாநிலங்களில் உள்ள ஒரு சிலரிடம் இந்த சிறுவர்களை அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு  வந்து விடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
சிறுவர்களை அழைத்துச் சென்று மோசடி செய்து வரும் கும்பல்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மலை வாழ் பழங்குடியின மக்களிடம்  தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்ற விழிப்புணர்வை தேனி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும். மாயமான சிறுவர்களை மீட்டு எடுக்கும் முயற்சியில் தேனி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button