லஞ்ச ஒழிப்புத் துறை

யானைத் தந்தம் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் டாப்ஸ்லிப் வனத்துறை அதிகாரி!?

கோவை வனத்துறையில் தலைவிரித்தாடும் சட்டவிரோதமாக கடத்தல் மற்றும் லஞ்ச ஊழலை தடுக்க தடுமாறுகிறதா தமிழக அரசு!

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தை ஆண்ட முன்னாள் அமைச்சர்கள் மீது மிகப்பெரிய ஊழல் பட்டியலை இதற்கு முன்பிருந்த தமிழக ஆளுநரிடம் கொடுத்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தற்போதுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது வனத் துறையில் உள்ள வனத்துறை அதிகாரிகள் சமூக விரோதிகளிடம் தொடர்பு வைத்து சட்டவிரோதமான கடத்தல் தொழில் மற்றும் லஞ்சம் ஊழலில் சிக்கி மறுபடியும் அதே இடத்திற்கு வந்து தங்களுடைய சித்து விளையாட்டுகளை நடத்துவது தான் வேதனையாக உள்ளது.

அந்தவகையில்
நான்கு வருடம் முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப் சிலிப் செல்லும் வழியில் மீன்கரை சாலையில் அமைந்துள்ள உலந்தியில் உள்ள வன வரவேற்பு அறையில் வன காப்பாளராக இருந்தகாசலிங்கம்
டாப்ஸ்லிப் செல்லும் சட்டவிரோதமான செயல்படும் நபர்களிடம் பழக்கம் மலையிலிருந்து பல லட்சம் பெறுமான உயர்ரக மரங்களை லாரிகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல மாதம் பல லட்சங்கள் லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற புகார்கள் வந்த நிலையில்
அதன்பின் பதவி உயர்வு பெற்று
ஆனைமலை சரக வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய போது இரண்டு யானை தந்தங்கள் காணாமல் போனதை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அப்போது லஞ்ச ஊழலில் ஈடுபட்டிருந்த காசிலிங்கம் வன சரகர் யானைத் தந்தம் திருடும் சட்டவிரோதமாக குற்றச்செயலில் ஈடுபடும் கேரளா மன்னார்க்காடு சந்தனம் மரம் கடத்தல் சலீம்க்கு உடந்தையாக இருந்து இரண்டு யானை தந்தங்களை கடத்தி இருப்பார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது பற்றி வன ஆர்வலர்கள் பலர் வனத் துறை உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததின் பெயரில் இவர்மீது துறை ரீதியான விசாரணை நடந்து கொண்டிருந்த போது வனச்சரகர் காசிலிங்கம் யானை தந்தத்தை மறைமுகமாக கொண்டு வந்து வைத்துவிட்டு தப்பித்துள்ளார். அதன்பின்
விசாரணை என்ற பெயரில் காங்கேயத்தில் வனத்துறை அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இன்

சில மாதங்களே காங்கேயம் வனச் சரகராக பணியாற்றிய காசிலிங்கம் தற்போது பண பலத்தை வைத்து உயர் அதிகாரிகளுக்கு கையூட்டாக பல லட்சங்களை கொடுத்து மறுபடியும் செல்வ செழிப்போடு இருக்கும் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் உலந்தி வனசரக அதிகாரியாக காசிலிங்கம் மாறுதலாகி வந்துள்ளதாக தகவல்.
காசிலிங்கம் ஆன் லைன் புக்கிங்கில் முறைகேடு செய்வதில் பலே கில்லாடி என்கின்றனர் அந்த பகுதியில் உள்ளவர்கள்.
டாப்ஸ்லிப் மேலே உள்ள தங்கும் விடுதிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது அது போல் டாப் சிலிப் அருகே பரம்பிக்குளம் கேரளாவில் பகுதி உள்ளதால் அங்குள்ள தங்கும் விடுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் பதிவு செய்து சரியாக சென்று வருவதாக கூறுகின்றனர்.

ஆனால்
டாப்ஸ்லிப் தங்கும் விடுதிக்கு  செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்தால் எப்போதுமே புக்கிங் ஃபுல் என்று காண்பிக்கும் .

அதற்கு காரணம் காசிலிங்கம் அவருக்கு தெரிந்த 20 நபர்களின் பெயரில் புக்கிங் செய்து வைத்து வசதியுள்ளவர்கள் சுற்றுலாவுக்கு வரும் போது ஆன்லைன் புக்கிங் செய்தவர்கள் வரவில்லை என்று கேன்சல் செய்து இவர்களுக்கு ரசீது போட்டு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்று வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் வனச்சரகர் காசிலிங்கம் தான் வசூலுக்கு செல்ல முடியாத இடங்களுக்கு
கல்லூரி படிக்கும் தன் மகனுக்கு 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம்  வாங்கிக் கொடுத்து  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றி உள்ள மர அறுவை மில்களில் மாமுல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இதுபற்றி வனச்சரகர் காசிலிங்கத்திடம் நீங்கள் வனச்சரக அதிகாரியா உங்கள் மகன் அதிகாரியா என்று கேட்டால் தரைகுறைவாக பேசுவதோடு ஒருமையில் பேசி வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எது எப்படியோ வனத்துறை பாதுகாக்கப்படவேண்டும் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்கு வனத்துறை அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

ஆனால் இது போன்ற ஒரு சில வன அதிகாரிகள் தன் சுயலாபத்துக்காக சட்டவிரோதமான நபர்களுடன் உடந்தையாக இருந்து கடத்தல் தொழில் செய்து வருவதை தடுத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனங்களை காப்பாற்ற முடியும்.

வனம் செழித்தால் மழை பெய்யும் .
மழை பெய்தால் நாடு செழிக்கும் .
நாடு செழித்தால் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்.

ஆகையால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வனத்துறையில் நடக்கும் லஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை செய்ய தனிக்குழு அமைத்து லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகளை களை எடுக்க வேண்டும் என்பதே வன சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button