ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயில் கருகி 9 பேர் பலி! 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!


பாதுகாப்பின்றி பயணிகளை ரயிலில் அனுப்பியதால் ரயிலில் விபத்து! அமைச்சர் மூர்த்தி மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தா பூரை சேர்ந்த பேசின் என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது தென்னக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ சென்றுள்ள காவல்துறை மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு
மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர்.

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை உறவினர்களிடம் அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.


கடந்த 17-ஆம் தேதி லக்னோவில் ஆன்மிக பயணத்தை தொடங்கிய 63 பேர் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நாகர்கோவிலில் இருந்து நேற்று புனலூர் – மதுரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, இன்று அதிகாலை, 3.47-க்கு மதுரை வந்தடைந்தது. இந்த பெட்டி, அனந்தபுரி விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு நாளை சென்னை வருவதாக இருந்தது.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் பெட்டியில் காலை 5.15 மணிக்கு சிலிண்டர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.