லஞ்ச ஒழிப்புத் துறை

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக அரசு அலுவலங்கள் தீபாவளி பண்டிகைக்காக பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்டவை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து கணக்கில் வராத ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்ற புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜா முகமது மற்றும் போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்திருந்த அரசு போக்குவரத்து கழகத்தில் முதுநிலை உதவியாளராக பணிபுரியும் ராமகிருஷ்ணனை சோதனையிட்டனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள ஒரு டேபிளில் இருந்து ரூ.3 ஆயிரத்து 250 ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ராமகிருஷ்ணன் அரசு பஸ்களுக்கு பெர்மிட் எடுப்பதற்கும், வரி கட்டுவதற்கும் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர் என்பது விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 23ம் தேதியும், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 25ம் தேதியும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி முறையே ரூ.1.26 லட்சம், ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மேட்டூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீனாகுமாரி, போட்டோகிராபர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 10 நாட்களாக விடுமுறையில் இருந்த சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் சதாசிவம் (58), விடுமுறையில் இருந்த சதாசிவம் 7/10/2024 திங்கட்கிழமை அன்று பணிக்கு திரும்பினார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை பற்றி கேள்விப்பட்டதும் அவர் சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலக ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்து, ரெய்டு வராமல் இருக்கவும், அப்படியே வந்தால் முன்கூட்டியே தகவல் கொடுக்கமாதம் 50 ஆயிரமும், முன்பணமாக ரூ.1 லட்சம் லஞ்சமாக தருவதாக பேரம் பேசியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜியிடம் புகாரளித்தார். ஆனால் இந்த விஷயம் மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்திற்கு தெரியாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் ரைட்டிற்கு வரும்போது தகவல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அவர்,லஞ்சப் பணம் ரூபாய் ஒரு லட்சம் வைத்திருப்பதாகவும் இதனைச் சுங்கச்சாவடி அருகே உள்ள உணவகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 07/10/2024 இரவு சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் சுங்க சாவடி அருகே உள்ள ஓட்டலுக்கு தனியே சென்றார் . அப்போது சதாசிவம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சப் பணத்தை டிஎஸ்பி கிருஷ்ணராஜனிடம் வழங்கினார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நரேந்திரன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சதாசிவத்தைக் கைது செய்தனர். அதன் பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல் தேனியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய போது கணக்கில் வராத த கணக்கில் வராத ரூ.62,140 பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது. இங்கு நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பு வகிக்கும் மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., சிங்காரவேலு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் முரளீதரன், அலுவலக கண்காணிப்பாளர், அலுவலர்கள் இருந்தனர்.

தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது. இங்கு நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பு வகிக்கும் மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., சிங்காரவேலு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் முரளீதரன், அலுவலக கண்காணிப்பாளர், அலுவலர்கள் இருந்தனர். 08/10/2024 அன்று தேனி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 6 பேர் கொண்ட போலீசார் உள்ளே நுழைந்தனர்.அலுவலகத்தில் உள்ள 2 நுழைவு வாயில்களின் கதவுகளில் ஒன்றை பூட்டி அனைவரையும் உள்ளே இருக்க கூறி சோதனையை துவக்கினர். அப்போது தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி ஒருவர், புரோக்கர்கள் சிலர் உள்ளே இருந்தனர். அவரது வாகனங்களை ஆய்வு செய்தனர். பின், ஆர்.டி.ஓ., ஜீப்., வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார், நேர்முக உதவியாளர் முரளிதரன் பயன்படுத்தும் கார் ஆகியவற்றை சோதனை செய்த போலீசார், அலுவலர்கள், பணியாளர்கள் தவிர பிறரை எழுத்துப்பூர்வ கடிதம் பெற்ற பின் வெளியே அனுப்பினர். இரவு 10:00 மணிக்கு சோதனையை முடித்த போலீசார், கணக்கில் வராத 62 ஆயிரத்து 140 ரூபாயை பறிமுதல் செய்தனர்.கணக்கில் வராத பணம் குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். உரிய பதில் கிடைத்தவுடன் மேல் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யப்படும்’என ‘டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மத்தியில் பயம் கலந்த அச்சத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

Related Articles

Back to top button