காவல் செய்திகள்

வரதட்சணை கொடுமை புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை  குழந்தையை வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச்சென்ற  குடும்பத்தினர்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சனை புகார் மீது 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண் குடும்பத்தினருடன்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா- குழந்தையை காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்று விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எ.வெள்ளோடு நரசிங்கபுரத்தை சேர்ந்தவர்

மகாலட்சுமி (வயது-24). இவருக்கும் தாடிக்கொம்பு, சுக்காம்பட்டியை சேர்ந்த மணி முருகன் என்பவருக்கும் கடந்த கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு பவனேஷ் என்ற ஒன்றை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 5 லட்சம் பணம் மற்றும் நகை 3 பவுன்  வரதட்சணையாக தாய் வீட்டில் இருந்து வாங்கிவரச்சொல்லி மகாலட்சுமியின் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் கணவர்  வீட்டில் இல்லாத நேரத்தில் மகாலட்சுமிக்கு அவரது மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாலட்சுமி இதுகுறித்து தனது கணவரிடம் கூறியும், கணவர் அவரது தந்தையை கண்டிக்காததால், மகாலட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து மகாலட்சுமியின் குடும்பத்தினர்,

வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக ஐந்து முறை புகார் செய்தும், மகளிர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இன்று வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை  குழந்தையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிறுவனை  வடமதுரை மகளிர் காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்று விட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது, வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் அதிகமாக லஞ்சம் வாங்குவதாகவும், பணம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மகாலட்சுமியின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எது எப்படியோ திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button