லஞ்ச ஒழிப்புத் துறை

வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து!  ராயல் என்பீல்ட் ஷோரூம்!
ஆடம்பர சொகுசு  பங்களா!தொழிலதிபராக வலம் வரும் குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா!



நாமக்கல் மாவட்டம், கனரக வாகனங்களுக்குப் பெயர் பெற்றது, ஏனெனில் இது லாரி பாடி கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ளது மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்திற்கு முக்கிய மையமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரி பாடி கட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், இலவசமாக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் மையங்களும் இங்கு உள்ளன.
மத்திய அரசு, கனரக வாகனங்களுக்கு, தகுதிச் சான்றிதழ் பெற தற்போது உள்ள கட்டணத்தைவிட பல மடங்கு உயர்த்த உத்தேசித்துள்ளது.இதில், பத்து முதல், 13 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு, 1,000 ரூபாய், 13 முதல், 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு, 5,000 ரூபாய், 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு, 25,000 ரூபாய் என, தகுதிச்சான்றிதழ் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஓரிரு வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உண்டாகும்.


இந்த நிலையில் கனரக வாகனங்களுக்கான தகுதி சான்று வழங்க குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படுவதாக மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அதுமட்டுமில்லாமல் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு மாதம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும்  மோட்டார் வாக ஆய்வாளருக்கு கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்  வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் சில்லாங்காடு பகுதியில்  வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது.


குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும் நித்யா அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்றும் எப்போது போவார் என்றும் யாருக்குமே தெரியாது !?
இதனால்  வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள்  நீண்ட நேரம் காத்திருக்கும் அவல ஏற்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு முறையாக வருவதில்லை என்றும் அது மட்டுமில்லாமல் போக்குவரத்து துறையில் இருந்து வழங்கியுள்ள  அடையாள அட்டையை கழுத்தில் எப்போதுமே போடுவதில்லை என்றும்
ஏதோ மாவட்ட ஆட்சியர் போல தன்னை தானே நினைத்துக் கொண்டு நிழல் மாவட்ட ஆட்சியர் போல நடந்து கொள்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வரும் பொது மக்களிடம்  அவர்களது குறைகளை கேட்க கூட மனமில்லாமல் அவர்களிடம் மிரட்டும் தோனியில் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும்  மட்டுமில்லாமல் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா  நேர்மையான அதிகாரி போல் தன்னைத்தானே நினைத்துக் கொண்டு தான் தோன்றித்தனமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சில நாட்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் காலை 9 மணி முதல் காத்திருந்ததாகவும் ஆனால் 11 மணிக்கு மேல் தான் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா வந்ததாகவும்
இதனால் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யாவுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்த வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகன பதிவு ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் வாகன தரச் சான்று போன்ற தேவைகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்து கொடுப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய இருவரும்  கண்டுகொள்ளாமல் இடைத்தரகர்களை வைத்து கல்லாகட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா மீது வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மையா என
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து  அலுவலகத்தின் அருகே இருக்கும் ஒரு சில சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சி தரும் திடிக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.
அது என்னவென்றால் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருக்கும்
நித்தியாவின்  சொந்த ஊர் கொல்லிமலை அடிவாரம் முத்துக்காடு பகுதி என்றும் இவர் திருமணம் செய்துள்ள நபர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இடைத்தரகராக வந்தவர் என்றும் இருவருக்கும் நட்பு உண்டாகி அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் தன் கணவர் மூலம் தான் அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வேலைகளையும் தன் கணவரும் மூலமே கச்சிதமாக வேலையை முடித்து அதற்கான சன்மானத்தை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன.

தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் வித்தியா கொல்லிமலை சின்னண்ணன் பெரியண்ணன் கோவில் அருகில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா   கட்டி இருப்பதாகவும்
அதுமட்டுமில்லாமல் நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் பகுதியில்  ஐந்து   காலி வீட்டு மனைகள் வாங்கி உள்ளார் என்றும் அப்படி வாங்கியுள்ள காலி வீட்டு மனையின் மதிப்பு சுமார் 4 கோடி இருக்கும் என்றும்
இவை அனைத்தும் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியாவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பெயரில் பினாமியாக வாங்கியுள்ளார் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் .
அது மட்டும் இல்லாமல்
ராசிபுரம் பகுதியில் ASP  சர்வீஸ் சென்டர்  என்ற பெயரில்  ஒன்று நடத்தி வருவதாகவும்
அது மட்டுமில்லாமல் உயர்தர சைவ உணவகங்கள்  நடத்தி வருவதாகவும்
அதைவிட அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் ராயல் என்ஃபீல்டு  ஷோரூம்  நான்கு இடத்தில் வைத்து இருப்பதாகவும்
இதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் 

ராசிபுரத்தில் ஒரு ராயல் என்பீல்ட் ஷோரூம் மற்றும் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ராயல் என்பீல்ட் ஷோரூம் ஒன்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் இருக்கும்  இவைகள் அனைத்துமே மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யாவின் பெயரில் எதுவுமே இல்லை என்றும் சாதுரித்தியமாக தங்களது உறவினர்கள் பெயரில் பினாமியாக நடத்திக்கொண்டு நிழல் தொழிலதிபராக வலம் வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
ஆனால் பினாமிகள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்வதற்கு  பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் யாரும் இருக்கிறார்களா!? இல்லை உயர் அதிகாரிகளின்
யார் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது!
ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா பணியில் இருந்த போது லஞ்சம் வாங்கிய பணத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உடனடியாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என்றும் ஆனால் மீண்டும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு  வருவதற்கு உயர் அதிகாரிகளின் ஆதரவா !?இல்லை பணம் பலத்தாலா !? அரசியல்வாதிகளின் பின்புலத்திலா !? என கடவுளுக்கு தான் வெளிச்சம்!
இதில் கொடுமை என்னவென்றால்
பத்தாண்டுகளுக்கு மேல் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நித்தியா மோட்டார் வாகன ஆய்வாளராக பணி செய்து வருவது தான்  ஆச்சரியமாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எது எப்படியோ
அரசு ஊழியர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக பினாமி பெயரில் மறைமுகமாக சொத்துக்கள் வாங்கி இருந்தால்
பினாமி
பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க
வருமான வரித்துறை மற்றும்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மட்டுமே இது உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்!
பொறுத்திருந்து பார்ப்போம்




நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளர் வருகை தாமதமாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுடன் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா வாக்குவாதத்தில் …

Related Articles

Back to top button