வாரிசு திரைப்படத்தின் சர்ச்சையை தானாகவே விஜய் உருவாக்கி வருகிறாரோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிக்கை சரியானது தான்
கே ராஜன் ! சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் அதே நாளில் இத் திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் சங்கரந்தி தசரா போன்ற திருவிழா நேரங்களில் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட நேரடி திரைப்படத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சில நாட்களாக தமிழக சினிமா வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் வாரிசு திரைப்படம் சர்ச்சையை தானாகவே விஜய் உருவாக்கி உள்ளாரோ என்ற சந்தேகம் இருப்பதாக
கே ராஜன் தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரி பொங்கலுக்கு மூன்று மொழிகளில் வெளிவர இருக்கும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆந்திராவில் வெளியிடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக பல இயக்குனர்கள் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் அவர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
வாரிசு திரைப்படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்கிய விஜய்!?
நடிகர் விஜய் நடித்த ஒரு சில திரைப்படங்கள் திரைப்படம் வெளிவரும் போதெல்லாம் சர்ச்சை ஏற்படுவது வழக்கம் தான் என்றும் இந்த சர்ச்சையை விஜய் தானாக ஏற்படுத்தி உள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் தயாரிப்பாளர் கே ராஜன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியிட இருப்பதால் ஆந்திராவில் தெலுங்கு திரைப்படம் வெளியிட்ட பின் ஒரு வாரத்திற்கு பின் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒற்றுமையுடன் இருப்பதால்தான் தெலுங்கு திரைப்படத்திற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது ஆந்திரா தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிகிறது. அதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வாரிசு திரைப்படத்தின் சர்ச்சை தற்போது விஜயின் அரசியல் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக இது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி பனையூரில் ரசிகர்களை சந்தித்துள்ளதாகவும், விஜய் அரசியல் வருவதற்கு முன்பு முன்னோட்டமாக ரசிகர்களை சந்தித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
வாசித் திரைப்படத்திற்கு விஜயின் சம்பளம் !?
விஜய்
வாரிசு திரைப்படத்திற்கு 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது என்று கே ராஜனிடம் தொலைக்காட்சி நிருபர் கேட்டதற்கு அதிக சம்பளம் வாங்கியுள்ளார் என்பது உண்மைதான் என்றும் அதனால்தான் திரைப்படம் வெளியிடும்போது வரும் எதிர்ப்புகளை விஜய் மட்டுமே சந்திக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் கூறியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது