Uncategorizedகாவல் செய்திகள்

விபச்சார  கோட்டையாக மாறும் புதுக்கோட்டை!?
ஆன்லைனில் புக் செய்தால் பெண்கள் சப்ளை…! வெப்சைட் மூலம் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

புதுக்கோட்டையா?
விபச்சார  கோட்டையா!?
நவின தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

விபச்சாரம் என்பது நம் நாட்டில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வழக்குரைத்தல் மற்றும் பொது விபச்சாரம் சட்டவிரோதமானது. ஒரு விபச்சாரத்தை உரிமையாக்குவது சட்டத்திற்கு எதிராகவும் இருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் மிகவும் அரிதாகவே செயல்படுத்தப்படுகின்றன.
தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டதாக கருதப்படும் செயல்களைச் சற்று வெளிப்படையாகவே கையாளுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
புதுக்கோட்டை புது பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் வி எஸ் லாட்ஜில் மசாஜ் என்ற பெயரில்  விடுதிகளை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  29/03/23 அன்று புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் விபச்சார கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

29/03/2023

புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே ஆன்மீக பூமியாகும் . புதுக்கோட்டை சுற்றி ஒரு கிலோமீட்டர் ஒரு ஆன்மீக  தளங்கள் அமைந்திருக்கும்.
இந்த ஆன்மீக பூமியில் பல மகான்கள் வாழ்ந்ததற்கான பல வரலாறுகள் இருப்பதை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
அப்படிப்பட்ட ஆன்மீக பூமியான இந்த புதுக்கோட்டை நகரத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  ஆன்லைனில் புக் செய்தால் பெண்கள் சப்ளை…! வெப்சைட்டில் நடக்கும் ஹைடெக் விபச்சார தொழில் அதிர்ச்சி தகவல்!

புதுக்கோட்டை மாநகரத்தில்  பெரியார் நகர், பூங்கா நகர், பழனியப்பா நகர், நிஜாம் காலணி என்று சொல்லப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் நடத்தி வருவதாக கூறி விபச்சாரத் தொழிலை நடத்தி வருவதாக தகவல் .

நிஜாம் காலணி.பழனியப்பா நகர்.

இந்தப் பகுதிகளில் மட்டும்தான் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய விஐபிகள் என்ற சொல்லப்படும் நபர்கள் வசித்து வரும் பகுதிகளாகும் அப்பகுதியில் சொகுசு ஆடம்பர பங்களா  போன்ற வீடுகளை வாடகைக்கு எடுத்து  செல்போன் மூலமாக தனி ஆப் ஒன்று உருவாக்கி அதன் மூலம்  வாடிக்கையாளர்களை  தொடர்பு கொண்டு


வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அழகிகளின்   அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி

ஒரு மணி நேரம் முதல் ஒரு நாள் முழுவதும் உல்லாசமாக இருக்க  பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை  நிர்ணயம் செய்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு அதன்  பின்பு  அழகிகள் தங்க வைத்திருக்கும் ஆடம்பர சொகுசு பங்களாவிற்கு  வர வைப்பார்கள் என்றும் அப்போது விபச்சார தொழில் நடக்கும் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பாக  பாடி காட்  என்று சொல்லிக் கொள்ளும் குண்டர்களை வைத்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த பின்பு தான்
வாடிக்கையாளர்கள் காரில் அழைத்து வரப்படுவார்கள் அதன் பின்பு அந்த சொகுசு பங்களாவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள்   அழகிகளுடன்  ஒரு சில மணி நேரம் உல்லாசமாக இருந்து விட்டு முழு திருப்தியுடன்  வெளியே வந்தவுடன் அவர்களை பாடிகார்ட் என்று அழைக்கப்படும் குண்டர்கள் பாதுகாப்புடன்   அனுப்பி வைத்து வருவதாகவும் இந்தத் தொழில் நடக்கும் இடத்திற்கு   பயமில்லாமல் சென்று வரலாம் என்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஹைடெக் விபச்சாரம் நடக்கும் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்க்கும் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் மாதம் மாதம் பல லட்சங்கள் கப்பம் கட்டி வருவதால்  சட்ட விரோதமாக நடக்கும்  நவீன விபச்சார தொழிலுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் பல மகாண்கள்  வாழ்ந்த இந்த ஆன்மீக பூமியில் காவல்துறையில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள் துணையோடு பாதுகாப்புடன்  விபச்சாரத் தொழில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விபச்சாரத் தொழில் எப்படி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கி புலனாய்வு செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
படித்த பல இளைஞர்கள்  ஐ டி நிறுவனங்களில் வீடுகளில் இருந்து வேலை செய்து வருகின்றனர் இவர்கள் மாதம் சுமார் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் வாங்குகிறார்கள் என்றும் இதில் பல இளைஞர்கள் திருமணம் செய்தவர்களும் திருமணம் செய்யாத இளைஞர்களும் உல்லாசமாக  இருப்பதற்கு விபச்சாரத் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்று உல்லாசமாக வருவதாகவும்  அதிர்ச்சி அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.


இப்படி ஆன்லைன் மூலம் சட்ட விரோதமாக விபச்சார தொழிலை நடத்தி வரும் அந்த நபர்கள் சம்பந்தப்பட்ட  காவல் நிலையத்திற்க்கும் மற்றும் அரசியல்வாதிகள் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் ரவுடிகளுக்கும் மாதம் ஒரு பெறும் தொகையை கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகி  குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களை  குறி வைத்து ஆசை வார்தைகளை கூறி வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும் வெப்சைட் நடத்துபவர்கள் இதே போல, சென்னை, பெங்களூரு, ஐதிராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த தொழிலை நடத்துவதாகவும், அதற்கு வெளியூரில் இருந்து வந்து பெருநகரங்களில் ஹாஸ்டல்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் பெண்களை குறி வைத்து அவர்களை இந்த தொழிலில் ஈடுபட வைப்பதாகவும் பல திடுக்கிடும் தகவல்

சொகுசு வாழ்கை வாழலாம் என்று மூளை சலவை செய்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் அது மட்டும் இல்லாமல்  தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி வேலைக்கு செல்லும்  இளம் வயது பெண்களையும்  விபச்சார தொழிலில் ஈடுபடுத்த  முயற்சி செய்து வருவதாகவும்   அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆகவே போதைக்கு அடிமையாகி தவறான பாதைகளில் செல்லும் இளைஞர்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக தவறான பாதைகளில் செல்லும் பெண்களை காப்பாற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . அது மட்டும் இல்லாமல்  மாவட்டம் தோறும் காவல்துறை போதை ஒழிப்பு விழிப்புணர்வுகள் பிரச்சாரம் நடத்துவது போல் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்து தர வேண்டும் என்றும் அதேபோல் இளைஞர்கள் உல்லாசமாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தவறான பாதைகளில் செல்லும் இளைஞர்களுக்கு விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதால் என்ன பிரச்சனை என்பதை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button