விவசாய நிலத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ள காட்டு மாடுகள் !விவசாயிகளை கொடூரமாக பாக்கி வரும் அதிர்ச்சி சம்பவம்!அச்சத்தில் விவசாயிகள்!அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வனத்துறை !
தேனி மாவட்டம் கீழ் வடகரை பெரிய குளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கும்பக்கரை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரனை மாந்தோப்பில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு மாடு பயங்கரமாக அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால், இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த விவசாயி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காட்டு மாட்டை விரட்டிவிட்டு பலத்த காயமடைந்த விவசாயி நாகேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த விவசாயி, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமம், மரி மூர் விவசாய நிலத்தில் உள்ள மாந்தோப்பில் கடந்த 4 நாட்களாக காட்டு மாடு ஒரே இடத்தில் இருந்து கொண்டு, தோட்டத்திற்கு சென்று வரும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து
தேனி மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் மற்றும் மாவட்ட வன அலுவலர்.
தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்தா ஆகியோருக்கு தகவல் கொடுத்தும் விவசாய நிலத்திற்குள் உள்ள காட்டு மாட்டை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு அனுப்புவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் அப்பகுதி விவசாய பொதுமக்கள் காட்டு மாட்டினால் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளுக்கு உயிர்ப்பலி ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர் விவசாய நிலங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் 19/11/2024 கீழ் வடகரை பெரிய குளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பக்கரை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரனை மாந்தோப்பில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு மாடு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால், இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த விவசாயி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காட்டு மாட்டை விரட்டிவிட்டு பலத்த காயமடைந்த விவசாயி நாகேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது, காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த விவசாயி, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் காட்டு மாடுகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை தாக்கி வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எது எப்படியோ வனப் பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் விலங்குகளை உடனடியாக பாதுகாப்பாக வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்குள் உள்ள காட்டு மாடுகளை வன பகுதிக்கு அனுப்பி வைத்து விவசாயிகள் நிம்மதியாக விவசாய நிலங்களுக்கு சென்று வர அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது