அம்பத்தூர் பாமக வேட்பாளரை சந்திக்க மறுத்து புறக்கணிக்கும் திருவள்ளூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்ஸ்!

அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக அலெக்ஸ் இருக்கிறார்.

இவர்
2016ம் ஆண்டில் நடைபெற்ற அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர்
2021ம் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக போட்டியிட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றார்.
அதிலிருந்து அம்பத்தூர் பகுதியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளை கண்டாலே இவருக்கு பிடிக்காது என்கின்றனர். அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும் இவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தானா கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் பட்டியலை அனுப்புமாறு அதிமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளின் பட்டியலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதில் அதிமுக கட்சியில் நீண்ட வருடங்களாக உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்காமல் புதிதாக வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நியமித்து பட்டியலை மாவட்டச் செயலாளர் அலெக்ஸ் அனுப்பியதால் அம்பத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகளுக்கும் அலெக்ஸ்க்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து இருந்துள்ளது.
இந்த பிரச்சனை அதிமுக தலைமை வரை சென்றுள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளுவர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,
மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். அதனை சுட்டிக்காட்டி அம்பத்தூரில் அதிமுக மாவட்ட செயலாளர் அந்தஸ்து இருந்தாலும் மக்களிடையே செல்வாக்கு இல்லை என கூறி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளரை நிறுத்தியதற்கு முக்கிய காரணம் வன்னியர்களின் வாக்கு. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் வன்னியரும், பட்டியலின வகுப்பினரும் சம பலத்துடன் இருப்பதால்,
அலெக்சாண்டர் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர். அம்பத்தூர் பகுதியில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் குறைவாகவே உள்ளதால்
அம்பத்தூர் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு
தற்போது பாமகவில் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் அம்பத்தூர் தொகுதியின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நபராகவே இருந்து வரும்
முன்னாள் பாமக மாநில துணை பொது செயலாளர்

2011ம் ஆண்டு அம்பத்தூர் நகர மன்ற தலைவராக இருந்த கே.என்.சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தூர் தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் இருக்கும் அலெக்ஸ் வீட்டிற்கு பாமக வேட்பாளர் கே.என்.சேகர் சந்திக்க சென்றதாகவும் அலெக்ஸ் வீட்டில் இல்லை வெளியே சென்று இருப்பதாக அலெக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் கூறியதாகவும் தொடர்ந்து இரண்டு நாட்கள் சந்திக்க முயற்சி செய்தும் அலெக்ஸ் கே எம் சேகரை சந்திக்க விருப்பம் இல்லாமல் தவிர்த்து வருவதாகவும் பாமக வேட்பாளர் கே என் சேகர் உடன் அலெக்ஸ் தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என்று தெரியவில்லை என அப்பகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இது சம்பந்தமாக அம்பத்தூர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது அதிமுக கட்சி நிர்வாகிகளை அலெக்ஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் இதனால் அம்பத்தூர் பகுதியில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்குள் தொடர்ந்து உட்கட்சி பூசல் இருந்து வருவதாகவும் அலெக்ஸ் தனிக்காட்டு ராஜாவாக மட்டுமே இருக்க ஆசைப்படுவதாகவும் அவருடன் அப்பகுதி கட்சி நிர்வாகிகள் இருப்பதை விரும்பவில்லை என்றும் இது சம்பந்தமாக கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக தலைமைக் கழகத்திற்கு புகார்கள் வந்ததாகவும் அதன் அடிப்படையில் தான் அம்பத்தூர் தொகுதியை கூட்டணி கட்சி பாமகவுக்கு கொடுத்ததாகவும் அம்பத்தூர் அ.தி.மு.க கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் வட்ட செயலர்கள் கே என் சேகருடன் இணக்கமாக இருந்து பணியாற்ற தொடங்கி விட்டனர் என தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிமுக நிர்வாகிகள் மீதும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ அதிமுக கூட்டணி வேட்பாளராக இருந்தாலும் அவரை வெற்றி பெறச் செய்வதற்கான வேலையை அலெக்ஸ் செய்வாரா? என தெரியவில்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் கே.என் சேகர் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை!





