காவல் செய்திகள்

அலங்காநல்லூர் அருகே 400 சிலிண்டர்களை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியை சேர்ந்த மதன்குமார் (27), பழனி (47) என இருவர்

பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மானிய சிலிண்டர் மற்றும் வணிக நிறுவன சிலிண்டர் என 398 சிலிண்டர்களை வீட்டின் அருகே பதுக்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்து வருவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் எஸ் பி சீனிவாச பெருமாள் ஆலோசனையின் பேரில் டிஎஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கோவில்பாப்பாக்குடி மற்றும் ஆனந்தம் நகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்
கோவில்பாப்பாக்குடியைச் சேர்ந்த பழனி என்பவரின் வீட்டருகே இருந்த காலி இடத்தில் 100 மானிய விலை வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் மற்றும் 109 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 209 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனந்தம் நகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவரின் வீட்டில் இருந்து 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 189 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்துகள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யவும், இவர்கள் இருவரையும் கள்ளச்சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி  பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பல இடங்களில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை கூட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button