காவல் செய்திகள்

ஆள் கடத்தல் குற்றவாளியிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  பெண் காவல் ஆய்வாளர் கைது!



தென்காசி மாவட்டம் கடையம்
ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை கடையம்  காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சம்பந்தமாக செல்வகுமார் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி.
தினமும்  கடையம் காவல் நிலையத்தில்  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் செல்வகுமாருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியது. அதனைத் தொடர்ந்து செல்வ குமார், கடையம் காவல் நிலையத்தில் தினமும் குற்றவாளி செல்வகுமார் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
கடத்தல் வழக்கிலிருந்து செல்வக்குமாரை விடுவிக்கவும் அதுமட்டுமில்லாமல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதற்கு சேர்ந்து

கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்   மேரிஜெமிதா

கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்   மேரிஜெமிதா 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பி காவல் ஆய்வாளர் மேரிஜெமிதாவிடம்  கொடுக்குமாறு அனுப்பி விட்டுள்ளனர். செல்வகுமார் காவல் ஆய்வாளர் மேரி ஜெமீதாவிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்த போது
மறைந்திருந்த பால் குதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர், காவல் ஆய்வாளர் மேரிஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக தென்காசி கடையம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button