கனிம வளம் கொள்ளை

இயற்கை வளங்களை சூறையாடி கனிமவளம் கொள்ளை!
மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தையாக செயல்படும் தேனி கனிமவள உதவி இயக்குனர் மாரியம்மா!பசுமை மாறாப்பகுதியிலிருந்து வறண்ட பாலைவனமாக  தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி,தேனி ஆகிய தாலுகாக்களில் செயல்பட்டு வரும் சுமார் 58 குவாரிகளில் அளவுக்கு அதிகமான முறையில்  கணிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதும்,மணல் கொள்ளை, மலைகள் உடைப்பு மற்றும் நீர்நிலைகளில் கனிம வளங்கள்  மற்றும் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மழைப் பொழிவு குறைந்து, நீர் வளம் வறண்டு காணப்படுகிறது.

தொடர்ந்து கனிம வளங்கள் வெட்டி கடத்தப் பட்டு வரும் இந்த நிலை தொடர்ந்தால் பசுமை மாறாப்பகுதியிலிருந்து வறண்ட பாலைவனமாக  தேனி மாவட்டம் மாறும் அபாயம் உள்ளது.

தேனி மாவட்டத்தில்
மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தையாக  தேனி கனிமவள உதவி இயக்குனர் மாரியம்மா செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கனிம வளங்கள், மணல் கொள்ளை, மற்றும் வன அழிப்பு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதீத சரிவைச் சந்தித்து, மாவட்டம் பாலைவனமாக மாறிவரும் அபாயத்தில் உள்ளதாக 1, 2 செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ மற்றும் தொடர் சுரண்டல்களால் வளம் அழிந்து, விவசாயம் கேள்விக்குறியாகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் தேர்தல் நடைமுறை அமலில்  இருப்பதால் வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் தேர்தல் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணல் மாஃபியா கும்பல்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண்ணை அரசு அனுமதி வழங்கியதை விட சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக   வெட்டி  கடத்தி செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட மரிக்குண்டு கிராமத்தில்  காலை 5 மணியிலிருந்து   ஜேசிபி இயந்திரங்களை வைத்து கிராவல்  மண் சட்டவிரோதமாக வெட்டி நூற்றுக்கு மேற்பட்ட கனரக  டாரஸ் லாரிகளில்  கடத்திக் கொண்டு செல்வதாக பகுதி சமூக ஆர்வலர்கள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த சர்வே எண் 186 இல் வண்டல் மண் எடுத்து  ஊராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த  அனுமதி வாங்கிவிட்டு 
சட்ட விரோதமாக கிராவல் மண்ணை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்து  செங்கல் சூளைக்கு அதிக விலைக்கு  மணல் மாஃபியா கும்பல் பல கோடி ரூபாய்க்கு  விற்று வருகின்றனர்.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நபர்கள் மற்றும் கனிம வளங்களை வெட்டி எடுக்க பயன்படுத்தும் ஜேசிபி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல்
இயற்கை வளங்களை அழித்து கனிம வளங்களை வெட்டி கடத்தும் மணல் மாஃபியா கும்பலிடம் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு
கனிம வளம் கடத்தலுக்கு உடந்தையாக
தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரியம்மா   துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ இயற்கை வளங்களை அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக  கனிம வளங்களை வெட்டி சூறையாடும் சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக உள்ளது.

மேலும், இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சி நிர்வாக அதிகாரிகள் கண்ணிருந்தும் பார்வை செயலிழந்து போனது போல் நடந்து கொள்வதால் அரசிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.,

தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனரக டாரஸ் லாரிகள் மூலம் அளவுக்கு அதிகமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த ரஞ்ஜித்சிங் ஐஏஎஸ் அவர்கள் இந்த மாவட்டத்தில் தனது பணிக்கால இறுதிவரை வேடிக்கை மட்டுமே பார்ப்பாரா? மாறாக நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!?







  

Back to top button