காவல் செய்திகள்

இளைஞர்கள் மீது போலி கஞ்சா வழக்கு பதிவு செய்து தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும்   அதிர்ச்சி வீடியோ ! காவல்துறையின் கபட நாடகத்தின் மீது தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

இந்த நிலையில் போலி கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளது வீடியோ மூலம் ஆம்பளமாகியுள்ளது.தேனி மாவட்ட போதைப்
பொருள் தடுப்பு பிரிவு மற்றும்
தேனி அல்லிநகரம்
காவல்துறையின்
கபடநாடகம் அம்பலமான அதிர்ச்சி வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம்,பெரியகுளம் தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 26/04/ 2024 அன்று   இரவு 7:00 மணி அளவில்   தேனிமாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு
பிரிவு சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான  காவல்துறையினர் குழு மாறுவேடத்தில் கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்றுள்ளனர் . கஞ்சா விற்பனை கும்பல் யாரும் சிக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல்  தவித்துக் கொண்டிருந்த   காவல்துறையினர் அந்த வழியே சென்று கொண்டிருந்த  தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர்கள்(1)ஜீவராஜ் (2)கிருஷ்ணா பாண்டி ஜீவராஜ் ஆகிய மூன்று பேரை அழைத்து கஞ்சா விற்பனை கும்பல் தொடர்பாக விசாரித்துள்ளனர்,
மேற்படி இளைஞர்கள் தங்களுக்கு கஞ்சா விற்பனை கும்பல் பற்றி தகவல் ஏதும் தெரியாது என மறுத்துள்ளனர். அதற்கு மாறுவேடத்தில் இருந்த காவல்துறையினர் கஞ்சா விற்பனை கும்பலை பிடிப்பதற்காக வந்துள்ளதாகவும் அதற்கு உதவி செய்யும்படியும் அவ்வாறு உதவினால் சன்மானம் தருவதாகவும் கூறியுள்ளனர்,மேற்படி இளைஞர்களும் காவல்துறையின் கருத்தை ஏற்று சன்மானம் எங்களுக்கு வேண்டாம் ஆனால் உதவி வேண்டுமென்றால் செய்கிறோம்  என சொல்லி உதவிக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு செல்போன் எண்களை மேற்படி இளைஞர்களிடம் கொடுத்த காவல்துறையினர் அந்த எண்களுக்கு போன் செய்ய சொல்லி கஞ்சா கேட்க சொல்லி உள்ளனர். மேற்படி இளைஞர்களும் செல்போனில் அழைத்து கஞ்சா கேட்டுள்ளனர், தேவதானப்பட்டி  பகுதியில் யாரும் விற்பனை செய்யவில்லை என்பதால் மேற்படி காவல்துறையினர் அளித்து செல்போனின் தொடர்பு கொண்ட போது தேனி உழவர் சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் ஒன்று கஞ்சா விற்பதாகவும் வந்து வாங்கிக் கொள்ளும் படியும் சொல்லி உள்ளனர். மேற்படி இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முன் செல்ல அவர்களை பின்தொடர்ந்து காவல்துறையினரும் சென்றுள்ளனர்! மேற்படி இளைஞர்கள் உழவர் சந்தை பகுதியை அடைந்து செல்போனில் தொடர்பு கொண்ட உழவர் சந்தை பகுதி கஞ்சா விற்பனையாளரிடம் கஞ்சாவை கொண்டு வரும்படி சொல்லி உள்ளனர். மேற்படி நபரும் 100 கிராம் கஞ்சாவை கொண்டு வந்துள்ளார் !!!! இளைஞர்களுடன் வந்தவர்கள் காவல்துறையினர் என்பதையும் அவர்கள்  சுற்றி வளைத்ததை நன்கு அறிந்து கஞ்சா விற்பனை கும்பல் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறை அவர்களை பிடிக்க முடியாமல் போய் உள்ளது, மேற்படி கஞ்சா விற்பனை கும்பல் தப்பி ஓடி விட்டதால் கஞ்சா விற்பனை கும்பலை பிடிப்பதற்காக உதவிக்கு  அழைத்து வந்த இளைஞர்களை கஞ்சா வைத்திருந்ததாக கூறி காவல்துறையினர் வழக்கு போட போவதாக மிரட்டி உள்ளனர். மேற்படி இளைஞர்கள் நீங்கள் தானே  உதவி செய்தால் சன்மானம் தருவதாக சொல்லி அழைத்து வந்தீர்கள் இப்போது இப்படி செய்வது சரியல்ல என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் தேவதானப்பட்டியில் இருந்து தேனிக்கு வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த முத்தையா என்பவர் தனது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரும் காவல்துறையிடம் சென்று நடந்து விவரங்களை கேட்டுள்ளார்! எங்களிடமே எதிர்த்து பேசுகிறீர்களா? உங்களை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ள போகிறோம் எனச் சொல்லி தாக்கியவாறு தேனி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மூன்று இளைஞர்களையும் சாதியின் பெயரைச் சொல்லி தாக்கியதாகவும் கஞ்சா விற்பனை செய்ததாக எழுதிக் கொடுக்கும்படி சித்திரவதை செய்துள்ளனர்!
அதன் பின்பு காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் தேனி நகர் காவல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர் சொல்லவே காவல் ஆய்வாளர் நான் இவர்களை கைது செய்யவில்லை, எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை இது தேவையில்லாத பிரச்சனை நான் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய மாட்டேன் என மறுத்துள்ளார்.தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உத்தரவின் பேரில் தேனி நகர் காவல் நிலையத்திலிருந்து அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் மீது வாகன சோதனையின் போது 100 கிராம் கஞ்சா பிடிபட்டதாக சொல்லி வழக்கு பதிவு செய்ய சொல்லி உள்ளனர்.
தேனி அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர்_கண்மணியும் சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாளும் மேற்படி வழக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர் அவர்களை கட்டாயப்படுத்தி வழக்கு பதிவு செய்ய போதை பொருள் கடத்தல் பிரிவு காவலர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.போதை பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் மேற்படி இளைஞர்கள் மீது 26/4/24 இரவு 7 மணி அளவில் அழைத்து வந்த நபர்களை  27/4/24 காலை நான்கு மணி அளவில்   வாகன_சோதனையின்_போது கஞ்சா வைத்திருந்ததாக 100 கிராம் கஞ்சா வை  காவல்துறையினர் கைப்பற்றியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்படி காவல்துறையினரே
இது தேவையில்லாத பொய்வழக்கு என்பதை வாய் மூலமாக சொல்லியுள்ள காட்சிபதிவுகள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் மேற்படி இளைஞர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்க தேனி நகர்காவல்நிலைய சிசிடிவி காட்சி பதிவுகளையும் தேனி அல்லிநகரம் காவல் நிலைய சிசிடிவி காட்சி பதிவுகளையும் நகல் கோரி மனு செய்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு மூவரையும் கைது செய்யப்பட்டதாக கூறி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யாமல் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாகக் கூறி தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனை கண்டித்தும், அல்லிநகரம் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளரை கண்டித்தும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க வேண்டிய காவல்துறை அதற்கு உதவி செய்ய வாருங்கள் என அழைத்து சென்று அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பது என்பது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. ஆகவே தமிழக காவல்துறை இயக்குனர் அவர்கள் சிறப்பு விசாரணை குழுவின் மூலம் மேற்படி பொய் வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தேனி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தேனி அல்லிநகரம் காவல்துறையினர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Related Articles

Back to top button