காவல் செய்திகள்

கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள  25க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்! சோகத்தில் மூழ்கிய கார் உரிமையாளர்கள்!


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் சிவரத்தினம். இவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

காரில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள  25-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி  முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காரை சர்வீஸுக்கு கொடுத்த உரிமையாளர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

Related Articles

Back to top button