காவல் செய்திகள்

குமாரபாளையம்  7 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை
தூக்கிலிட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை!

காமக்கொடூரன் 7 வயது குழந்தையை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்யும் தொழிலாளியின்  7 வயது மகள்  07/03/26 அன்று வ  இரவு 07:00 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.  நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மீண்டும் சிறுமி வீட்டுக்கு வந்த பொழுது, அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததையடுத்து,  பெற்றோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்தது. குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதற்குள் இத்தகவல் குமாரபாளையம் முழுவதும் பரவியதால், குமாரபாளையம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என  போலீஸ்சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குமாரபாளையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விமலா தலைமையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான  போலீசார்  குமாரபாளையம்   பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  போலீசார் நிச்சயமாக குற்றவாளிக்கு நீதிமன்ற விசாரணையின் முடிவில்  தூக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என தெரிவித்தும், களத்திலிருந்து  செல்ல மறுத்ததால் போலீசாரின் உதவியுடன் முற்றுகையில்  ஈடுபட்ட பெண்களை,  கலைந்து செல்லாமல் போனால்,  அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை செய்தனர்.  இதனையடுத்து  பெண்களும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி சேலம் வீராணம் பகுதி சேர்ந்த மணி என்கிற மணிகண்டன், 26, என்பதும்,  குமாரபாளையத்தில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.  குற்றவாளியின் பாதுகாப்பை கருதி போலீசார் வழக்கு விசாரணைக்காக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.  இருந்தாலும் பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு காத்திருந்தனர். குற்றவாளியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ;போது, திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள், அவனை  தூக்கில் போடுங்க, என்று சத்தம் போட்டனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:
குமாரபயம் நகரில் ஏராளமான தொழிற்கூடங்கள், கல்வி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளதால், தாலுக்கா அந்தஸ்து கிடைத்தும், லட்சகணக்கான பொதுமக்கள்  இருக்கும் இடத்தில் இன்னும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. குமாரபாளையம் போலிஸ் ஸ்டேஷனில் கூட பெண் போலீசார் குறிப்பிட்டு செல்லும் வகையில் யாரும் இல்லை. கணினி பணியாளர்கள் தான் உள்ளனர். இது போல் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து, உயிர் பலி ஆனால்தான் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பற்றி சிந்திப்பார்கள் போல.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button