சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் இணைப்பு! செயலிழந்து கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பெரியவாகைகுளம் ஊராட்சியில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில்
500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கழிவு நீர் கால்வாயில் குடங்களை வைத்து குடிநீர் பிடித்துச் செல்லும் பொதுமக்கள்.
இது சம்பந்தமாக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யூ சி பி ஐ எம் கே) சார்பாபாக பலமுறை கோரிக்கை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அது மட்டுமில்லாமல் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆர் பி உதயகுமார் அவர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவரும் இதுவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்க மனம் இல்லாமல் இருக்கிறார் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலமுறை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி யூ சி பி ஐ எம் கே சார்பாக நேரில் கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்
செயலிழந்து கோமாவில் இருப்பதாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யூ சி பி ஐ எம் கே) சார்பாக குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு வரும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யூ சி பி ஐ எம் கே) மாவட்ட செயலாளர் A. அனிபா விஜய் சார்பாகவும் மற்றும் பெரிய வாகைகுளம் கிராம பொது மக்களும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யூ சி பி ஐ எம் கே) திருமங்கலம் தொகுதி செயலாளர் A.ஜெயபால் அவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே கிராம பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் வழியாக செல்லும் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து வேறு பாதையில் குடிநீர் குழாய்கள் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (யூ சி பி ஐ எம் கே) சார்பாக கிராம பொதுமக்களை ஒன்று திரட்டி திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் விரைவில் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்..
பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை…




