நீதி மன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் டெத்!  குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!  ஒரு கோடி 4 லட்சம் இழப்பீடு வழங்கவும்!நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கொலை, பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் மற்றும் சமூகத்தில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிக்கு   அரசு அல்லது சட்டத்தின் மூலமாக விதிக்கப்படும் மரண தண்டனை தற்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பது காவலர்களுக்கு மரண தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில், 22.06.2020 அன்று

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலின் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்..இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அப்போதைய

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர். அந்த ஆறு வருடமாக நடந்து வந்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு 2026 மார்ச் 23 ஆம் தேதி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 2-ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு விவரம் ஒத்திவைக்கப்பட்டது..

இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 9 பேருக்கும் ஏப்ரல் 6, அதாவது திங்கள் கிழமை தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்  இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.. அப்போது ” சாத்தான்குளம் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு.. இந்த வழக்கில் லாக் அப் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று மாநில அரசும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசும் பரிந்துரைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்..

மேலும் ” காவல்நிலைய மரணம் மிக கொடியது, தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.. காவல்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இதை கொடுமையாகவே கருதப்படுகிறது.. எனவே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.. ஆனாலும் மரண தண்டனை தான் வழங்க வேண்டுமா என்பதையும் ஆலோசிக்க வேண்டி உள்ளது..

தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். காவல்துறையினரின் செயலை வாசித்தாலே மனம் பதைபதைக்கிறது.. எனவே இதுபோன்ற காவல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் அது மற்ற காவல்துறையினருக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாது..

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. சாத்தான்குளம் சம்பவம் சமூகத்தின் வளர்ச்சியை ஒடுக்கும் வகையில் உள்ளது.. அதற்கு ஏற்றார் போல் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும்.. எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொருளாதார ரீதியிலும் தண்டனை இருக்க வேண்டும்.. எனவே  இந்த வழக்கில் தந்தை மற்றும் மகன் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதால், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி  (IPC/BNS) இரண்டு கொலைக் குற்றங்களுக்காக  302, 376A போன்ற கடுமையான பிரிவுகளின் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது..” என்று நீதிபதி தெரிவித்தார்..

மேலும்  குற்றவாளிகளுக்கு

ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் அபராத தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.. அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மட்டும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

Related Articles

Back to top button