“ஜனநாயகன்” ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது! கட்டுப்பாடு விதித்துள்ள மலேசிய அரசு!

ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் கட்சி சார்ந்த டி.சர்ட், துண்டு மற்றும் பேஜ் கொடி எதையும் பயன்படுத்தக் கூடாது விஜய் அரசியல் சார்ந்து எதுவும் பேசக்கூடாது
கடும் நிபந்தனை விதித்துள்ள மலேசியா அரசு !
விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜனநாயகன்’
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின்
இசை வெளியீட்டு விழா

மலேசியாவில் வரும் டிச. 27 அன்று நடைபெற உள்ளது.
ஒரு மிகப்பெரிய இசை கச்சேரியுடன் ‘ஜனநாயகன்’ ஆடியோ வெளியீடு நடைபெற இருக்கிறது. ஆடியோ வெளியீடு நடைபெறும் அரங்கத்தில் சுமார் ஒரு லட்சம் இருக்கைகள் இருப்பதாக தகவல்.
மலேசியாவில் நடக்கும் ஆடியோ வெளியீட்டிற்கு விஜய்க்கு நெருக்கமான நபர்கள் கலந்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகிய மூவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
மலேசியாவில் ஜனநாயகன் பட ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு மலேசியா நாட்டு அரசு படக்குழுவிற்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது.
அந்த அனுமதியில் குறிப்பாக
இசை வெளியீட்டு விழாவில் படம் தொடர்பாக மட்டுமே விஜய் பேச வேண்டும் அரசியல் சம்பந்தமாக பேசக்கூடாது .
குறிப்பாக ஆடியோ வெளியீட்டுக்கு வரும் ரசிகர்கள் கட்சி சார்ந்த டி சர்ட்,துண்டு மற்றும் பேஜ் கொடி எதையும் பயன்படுத்தக் கூடாது என கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.
விஜய் கட்சி சார்பாக தமிழ்நாட்டில் இருந்து கன்டெய்னர் மூலம் மலேசியாவிற்கு அனுப்பப்பட்ட விஜய் கட்சி டி சர்ட்,துண்டு மற்றும் பேஜ் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என மலேசிய அரசு தடை விதித்ததுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு கன்டெய்னர் மூலம் கொண்டு செல்லப்பட்ட அனைத்தையும் மறுபடியும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால்
பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!



