காவல் செய்திகள்

திருமணத்திற்கு குறைவான விலையில் தங்கம் வைரம் நகைகள் வாங்கித் தருவதாக  EVP உரிமையாளரிடம் பெங்களூரைச் சேர்ந்த பெண்  ஆடை வடிவமைப்பாளர் ஒரு கோடி ரூபாய் நூதன மோசடி! நடந்தது என்ன!?


பெங்களூருவின் வயாலிக்காவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்   பார்வதி ( 42 வயது)  பிரேம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில்

ஆடை வடிவமைப்பு தொழிலில் செய்து வருபவர் பார்வதி.தனது கணவர் பார்த்திபனுடன் வசித்து வருகிறார்,
பார்வதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் சென்னை படித்து வருகின்றனர்.
பார்வதிக்கு சென்னை குரோம்பேட்டை பகுதியில் அடுக்குமாடி  குடியிருப்பில் வீடு ஒன்று இருப்பதாகவும் அந்த வீட்டில்  பெங்களூரில் இருந்து வரும்போது அங்கு தங்கி விட்டு செல்வார் என்று தெரிகிறது.
ஆடை வடிவமைப்பாளரான பார்வதிக்கு 

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில்.ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் கடந்த ஆண்டு சந்தோஷ் ரெட்டியின் சகோதரி மகளின்   திருமணத்திற்கான ஆடைகளை பார்வதி வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அதற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாகவும் அந்தப் பணத்தில்  30 லட்சம் ரூபாய்  பார்வதி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும்
அதன் பின்னர்  சந்தோச ரெட்டியும் பார்வதியும் நல்ல நண்பர்களாக பழகி, பின் குடும்ப நண்பர்கள் போல் பழகி வந்த நிலையில்
சந்தோஷ ரெட்டியின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து தற்போது நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தத் திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் நகைகள் விலை உயர்ந்த கை கடிகாரம் வாங்க வேண்டும் என  பார்வதியிடம் சந்தோஷ் ரெட்டி  கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளார்.
உடனே  Audemars piqute என்ற  மிக உயர்தர கைக்கடிகாரம் மற்றும் சாவிட்டர் டைமன் மற்றும் louts vuittonbag shirt slipper போன்ற பிராண்ட் பொருள்கள் பெங்களூரில் விலை குறைவாக  கிடைப்பதாகவும் நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை நல்ல முறையில்  எங்களது பிரைம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கி உங்களுக்கு அனுப்பி விடுகிறோம்
அதற்கு தற்போது சுமார் 3 கோடி ரூபாய் மட்டும் பிரைம்  என்டர்பிரைஸ் வங்கி கணக்கிற்கு  அனுப்பி விடுமாறும் வாங்கும் பொருள்களுக்கான ரசிதையும் அனுப்பி விடுவதாகவும் அதன் பின்பு கணக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று
பார்வதி கூறியுள்ளார்.
அதன்படி சந்தோஷ் ரெட்டி 3கோடியே 4 லட்சம் ரூபாயை பிரேம் என்டர்பிரைசஸ் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு பின்பு சந்தோஷ் ரெட்டியை தொடர்பு கொண்ட பார்வதி எங்கள் வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை அனுப்பியதால் எங்களுக்கு வருமானவரித்துறை பிரச்சனை வரும்  என்றும் ஆகையால் என் கணவர் பார்த்திபன் அந்தப் பணத்தை உங்களுடைய வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பி விடுகிறோம் என்றும் அதன் பின்னர் பெங்களூரில் பொருள்கள் வாங்கும் கடைக்கு நேரடியாக பணத்தை செலுத்தி விடுமாறும் பார்வதி கூறியுள்ளார்.
அதன் பின்னர் பெங்களூரில் உள்ள பிரபல நகை கடையில்  நகை ஆர்டர் செய்யும் போது நகைக்கான பணத்தை கட்ட வேண்டும் என பார்வதி கூறியுள்ளார். அதன் பின்பு பெங்களூரில் நகை ஆர்டர் கொடுத்த நகைக்கடைக்கு ஒரு கோடியே 5 லட்சம் பணத்தை சந்தோஷ ரெட்டி அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் சந்தோஷ் ரெட்டியை தொடர்பு கொண்ட பார்வதி நகைகள் ரெடியானவுடன் உங்களிடம் நகைகளை ஒப்படைத்து விடுகிறேன் எனக்கு கூறியுள்ளார்.
அதன் பின்னர் அன்று சந்தோஷ் ரெட்டியை தொடர்பு கொண்ட பார்வதி பெங்களூருக்கு வந்து நகை மற்றும் பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் கூறியுள்ளார்.
அதன்படி 12/07/25 அன்று சந்தோஷ ரெட்டி பெங்களூருக்கு சென்றுள்ளார். எப்போதும் வெளியூர் சென்றால் சந்தோஷ ரெட்டி சார் ஹோட்டலில் தங்குவார் ஆனால்  சந்தோஷ் ரெட்டியை ஹோட்டலில் தங்க வேண்டாம் நீங்கள் எங்கள் வீட்டு விருந்தாளியாக வந்துள்ளீர்கள் ஆகையால் நீங்கள் எங்கள் வீட்டில் வந்து தங்கலாம் எனக் கூறியுள்ளனர்.
அதன்படி பெங்களூர் சென்ற சந்தோஷ் குமார் பார்வதி வீட்டில் தங்கி பெங்களூரில் உள்ள பிரபல கடைகளில் 14 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். அதன் பின்னர் நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து நகை ரெடியாகாததால் ஒரு சில நாட்களில் நகைகள் வெளியானவுடன் அதை வாங்கிக்கொண்டு சென்னையில் வந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன் என  பார்வதி கூறியதை நம்பி சந்தோஷ் ரெட்டி சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார். இரண்டு தினங்களுக்கு பின்பு சந்தோஷ் ரெட்டி பார்வதியை தொடர்பு கொண்ட  போது பார்வதி செல்போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் சந்தோஷ ரெட்டி அழைப்பை பார்வதி எடுக்கவில்லை. அதன் பின்னர் பார்வதியின் whatsapp காலில் சந்தோஷ ரெட்டி நகைகளை கேட்டுள்ளார். அதற்குப் பார்வதி பணம் எங்களிடமாக கொடுத்தீர்கள்  பணம் அனுப்பிய கடையில் போய் கேளுங்கள் எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள் என பார்வதி கோபத்துடன் கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ ரெட்டி நான் காவல் நிலையத்தில் உங்கள் மீது புகார் கொடுப்பேன் என பார்வதியிடம் கூறியதற்கு நீங்கள் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது சென்னையில்  காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் எனக்கு தெரியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது அதுமட்டுமில்லாமல் என்னிடம்  தவறாக நடந்து கொண்டதாகவும் உன் மீது புகார் கொடுப்பேன்
என பார்வதி மிரட்டி உள்ளார்.
அதன் பின்னர் நூதன முறையில் பார்வதே மோசடி செய்ததை தெரிந்து கொண்ட ஈவிபி சந்தோஷ் ரெட்டி
நசரத்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதிமீது ஒரு கோடி ரூபாய் பணம் மோசடி புகார் கொடுத்துள்ளார்.  அந்தப் புகழைப் பெற்றுக் கொண்ட நசரத்பேட்டை  காவல்துறையினர் பார்வதிக்கு  ஆஜர் ஆக சம்மன் அனுப்பியுள்ளனர்.
அந்த சம்மனை பெற்றுக் கொண்ட பார்வதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி உள்ளார் ஆனால் நீதிமன்றம் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன் பின்னர் பார்வதி பெங்களூரில் தான் வாசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் எம்மையையும் என் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக சந்தோஷ ரெட்டி மிரட்டி வருவதாக பொய் புகார் ஒன்று கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


ஆனால்  பெங்களூர் காவல் நிலையங்களில் வடிவமைப்பாளர் பார்வதி மீது பண மோசடி செய்துள்ளதாக ஏற்கனவே இரண்டு புகார் இருப்பதாகவும்
ஆடை வடிவமைப்பாளர் பார்வதி தொழிலதிபர்கள் மற்றும் சமுதாயத்தில் அந்தஸ்துள்ள நபர்களை குறி வைத்து இது போன்ற நூதன பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் ஜவுளித் தொழில் அதிபர் ஒருவரிடம் இதே போன்று நூதன முறையில் பணமோசடி செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ என்ன நடந்தது என்ற உண்மையை நசரத்பேட்டை காவல் துறையினர் வடிவமைப்பாளர் பார்வதி மற்றும் அவரது கணவன் பார்த்திபனை அழைத்து வந்து விசாரணை நடத்தினால் மட்டுமே  நூதன முறையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து  வந்ததாக கூறப்படும் பார்வதியின் உண்மை வெளியே தெரியவரும்  என்பதுதான் நிதர்சனம்!

Related Articles

Back to top button