தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

திரைப்படங்கள் தயாரித்ததில் பல கோடி ரூபாய் நஷ்டம் ! தன்னுடைய வாழ்நாளை திரைத்துறைக்கு அர்ப்பணித்து  சிறு பட தயாரிப்பாளர்களுக்காக தொடர்ந்து
உங்களில் ஒருவனாக உங்களுக்காக எப்போதும் தோள் கொடுப்பேன்.
சாமுவேல் என்ற (பிரபதீஸ் சாம் )
செயற்குழு உறுப்பினர்  (எண்.37)


தமிழ் திரைப்பட துறையில் சுமார் 15 வருடங்களுக்கு மேல் 

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்
பிரபதீஸ் ஷாம் என்ற (சாமுவேல்) .

இவர்
(Blessing entertainers)
(Four square studios.)
என்ற இரண்டு பட நிறுவனங்களின் பெயரில் 

தேன்கூடு, அறியான், கருப்பு ஆடு , கஜானா , மாயை, புத்தன் இயேசு காந்தி ஆகிய ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் .
இதில்  மாயை,கஜானா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 10 வருடங்களாக பத்திரிகை துறையில் இணை ஆசிரியராக பணியாற்றி  சமூக சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தயாரித்து இயக்கிய முதல் திரைப்படமான  தேன்கூடு திரைப்படம் ஈழத் தமிழர்களை மையமாக வைத்து எடுத்த திரைப்படம். பல தடைகளையும் மீறி இந்தத் திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் பெரும் பேசும் பொருளாக அமைந்தது.
இந்தத் திரைப்படத்தை வெளியிட பல தடைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல்  யோகி பாபு நடித்த கஜானா திரைப்படத்தில் யாழியை மையமாக வைத்து பல கோடி  ரூபாய் பொருட் செலவில்   மிகப் பிரம்மாண்டமாக  அரங்கம் அமைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்..
அந்தத் திரைப்படத்தில் வியாபார ரீதியாக ஒரு சில நபர்கள் செய்த தவறினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் வரை  பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் பொருட்படுத்தாமல் தற்போது தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த பல கோடி ரூபாய் பணம் முழுவதையும் தான் நேசிக்கும் திரைத்துறைக்கு  அர்ப்பணித்ததாக நினைத்து தொடர்ந்து திரை துறையில் பணியாற்றி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
குறிப்பாக சிறு திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு முன் நின்று முதலில் குரல் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
22 ஆம் தேதி நடக்க உள்ள
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 
புதிய நிர்வாகிகளுக்கான
தேர்தலில் 


நலன் காக்கும் அணியில் செயற்குழு உறுப்பினராக (வாக்கு எண் 37) நிற்கிறார்.
ஆகவே   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களுடன் எப்போதும்   உங்களில் ஒருவனாக எப்போதும் தோள் கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில்  தெரிவித்துக் கொள்கிறேன்.





Back to top button