காவல் செய்திகள்

பணியிட மாற்றம் கேட்டு (grievance)இரண்டு முறைவிருப்பம் மனு கொடுத்து பணியிட மாற்றம் கிடைக்காததால் மன உளைச்சலில் காவலர்கள்! விரைவில் பணியிட மாற்றம் செய்ய ஆவடி காவல் ஆணையருக்கு கோரிக்கை!

ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்  சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள்
  ஆவடி காவல் ஆணையரகத்தில்   (grievance ) வீட்டில் இருந்து பல கி.மீ., தூரம் சென்று பணிபுரிந்து வருவதாகவும் ,குடும்ப சூழல், உடல்நிலை பிரச்னை ,குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பணியிட மாற்றம் கேட்டு
இரண்டு முறை
விருப்பம் மனு கொடுத்திருந்த நிலையில்
கடந்த  டிசம்பர், ஜனவரி மாதங்களில் கண்டிப்பாக பணியிட மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஜீரண ஆவடி காவல் ஆணையராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி மாநகர காவல் ஆணையராக (4-வது கமிஷனர்) 2026 ஜனவரி 1 அன்று பொறுப்பேற்றார்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி ஐ.பி.எஸ்., சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆவடி காவல் ஆணையராக புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட  பிரேம் ஆனந்த் சின்ஹா  ஜனவரி மாதம் 18 காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது..
ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், விருப்ப மனு கொடுத்து பணியிட மாற்றம்  செய்யப்படாமல் காத்திருக்கும் காவலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே, தேர்தல் பணியில் குளறுபடி, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க சிறப்பு எஸ்ஐகள், காவலர்கள் அளித்த பணியிடமாற்ற விருப்ப மனுக்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விருப்ப மனு கொடுத்து இருக்கும் காவலர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்த பின் கண்டிப்பாக பட்டியலில் உள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என ஆவடி காவல் ஆணையர் அலுவலக வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

Related Articles

Back to top button