பூட்டி கிடப்பில் போடப்பட்ட கருப்பட்டி கிராம ஊராட்சி மருத்துவ சேவை மையம் ! மக்கள் வரிப்பணம் வீணடிப்பு!பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பொம்மன் பட்டி மேல் நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் சின்ன இரும்பாடி கரட்டுப்பட்டி சாலாச்சிபுரம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு
மருத்துவ வசதி இல்லாத நிலையில்
8 கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கும் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.
சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று மருத்துவ சிகிச்சை பெற செல்வதால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை வர முடியாமல் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். கிராமப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை எளிதில் பெரும் வகையில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக் காலத்தில் 2013,/2014 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற ஊராட்சி மருத்துவ சேவை மையம் கட்டிடம் கருப்பட்டி பேருந்து நிலையம் அருகே கட்டி
திறக்கப்பட்டு கிராம ஊராட்சி மருத்துவ சேவை மையம் மூலம் சுற்றுவட்டார கிராமத்தில் வசிக்கும்சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உதவிகளை பெற்று வந்த நிலையில்
6 மாதங்களுக்குள் இந்த கிராம ஊராட்சி மருத்துவ சேவை மையம் திடீரென எந்த ஒரு காரணமும் இல்லாமல் மூடப்பட்டது.
அதன் பின்னர் 2021திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3.5 மச்சம் ரூபாய் செலவு பராமரிப்பு பணி நடைபெற்றது. ஆனால் மருத்துவ சேவை மையம் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாமல்
தற்போது வரை அந்த கட்டிடம் மூடப்பட்டு காட்சி பொருளாக மட்டுமே இருப்பதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவ சேவை மையத்தை திறக்க வேண்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை மருத்துவ சேவை மையத்தை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்
கருப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரும்பாடி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நாச்சிகுளம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் என இந்த மூன்று ஊராட்சிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் அடிப்படை மருத்துவ உதவிகளுக்காக சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட அருகில் உள்ள நகர்பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது .
ஒவ்வொரு கிராமத்திற்கும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது என அரசு கூறிவரும் நிலையில்
விபத்து நடக்கும் நிலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட மருத்துவ சேவை மையம் இல்லை என்றும்
பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தினசரி பல கிலோமீட்டர் செல்லக்கூடிய அவல நிலை உள்ளதாக கூறுகின்றனர்
ஆகையால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் ஊராட்சி பகுதிகளில் அரசு மருத்துவமனை அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




