வனப்பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அனுமதி வாங்கியதை விட அதிகமான பழமை வாய்ந்த அரிய வகை மரங்களை வனத்துறையினர் உதவியுடன் வெட்டி கடத்துவதாக அதிர்ச்சி தகவல்! இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!

மலைப்பகுதிகளில்
தனியார் நிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அறிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதன்படி, தனியார் நிலங்களில், இந்திய வன சட்டத்தின்படி பட்டியலிடப்பட்ட மரங்களை வளர்ப்போர், அவற்றை வெட்ட, வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல, மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான ஆன்லைன் வசதி, சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. குறிப்பாக சமவெளி பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, ஏற்கனவே உள்ள மலைத்தளம்’ என்ற புதிய இணையதளம் ஆன்லைன் வசதி பொருந்தாது.
மரங்களை வளர்ப்போர், ஆரம்ப நிலையில் இருந்தே வனத்துறைக்கு தகவல் தர வேண்டும். அதிகாரிகள், அதை கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு மரங்கள் வெட்டுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கும்.
வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் மரங்களை வெட்டும்போது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி வனச்சரணாலயம் ஆகும்.
ஆனால் நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளை

திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் காற்றில் பறக்க விட்டு அனுமதியின்றி சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்திச் செல்பவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தாலுகாக்கள் உள்ளன. சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை என மலை சூழ்ந்த பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
நெல் கரும்பு தென்னை பூக்கள், திராட்சை ,கொய்யா ,மா கத்தரி ,தக்காளி, கேரட் ,பீட்ரூட் ,முள்ளங்கி, பட்டர் பீன்ஸ் மற்றும் காபி ஏலம், மலை வாழைப்பழம் என அனைத்து வகை காய்கறி பழம் வகைகள் என
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மழைக்காலங்களில்
பழனி ஒட்டன்சத்திரம் ஆத்தூர் வத்தலகுண்டு நிலக்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட சுற்று பகுதிகள் அமைந்துள்ள மலைகளில் இருந்து வரும் தண்ணீர் மூலம் விவசாயம் செய்கின்றனர். மலைகளில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க மலை அடிவாரப்பகுதிகளில் பாலாறு. பெருந்தல ஆறு பரப்பளஆறு குதிரை ஆறு. நங்கஞ்சி ஆறு,
காமராஜர் நீர்த்தேக்கம். சிறுமலை நீர்த்தேக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட நீர்தேக்கங்கள் உள்ளன.
இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் விவசாயம் செய்ய தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட தாண்டி குடி மங்களம் கொம்பு காமனூர்
கே சி பட்டி குப்பம்மாள்ப்பட்டி ஆடலூர் பன்றி மலை சோலைக் காடு மணலூர் கொங்கு பட்டி மஞ்சள் பரப்பு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விவசாய நிலங்களில் உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக திண்டுக்கல் மாவட்டம் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றிருப்பதாக

மலைப்பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில்
பழமை வாய்ந்த அரிய வகை மரங்களை வெட்டி
நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் சுமார் பல லட்சம் டன் மரங்கள் கடத்தி எடுத்துச் செல்கின்றனர் என்றும் வெட்டப்படும் மரங்களுக்கு நம்பர் போடுவது போல் போடப்படுகிறது.
ஆனால் மரம் வெட்டுபவர்கள் நூறு மரங்களுக்கு அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறுகின்றனர்
ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி எடுத்து கடத்திச் செல்வதாகவும் மரங்கள் வெட்டும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களுக்கு நம்பர்கள் போடப்பட்டுள்ளது.
ஆனால் மணலூர் மஞ்சள் பரப்பு சோலை காடு காமனூர் ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வனத்துறை எந்த ஒரு குறியீடுகளும் போடுவது கிடையாது. அதேபோல் வன சட்டத்தில் உள்ள விதிமுறைகளை கடை பிடிக்காமல் சட்டவிரோதமாக அனைத்து மரங்களையும் வெட்டி கடத்தி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும்
சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கனரக லாரிகள் ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் கன்னிவாடி வத்தலகுண்டு மூன்று சோதனை சாவடி உள்ளது . இந்த மூன்று சோதனைச் சாவடி மற்றும் செல்லும் வழியில் சிசிடிவி கேமரா உள்ளது .
ஆனால் மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை என்றும்
மலைகளின் அடிவாரத்தில் விவசாய நிலங்களில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டி
இயற்கை வளங்களை அழித்து வருவதால் வன உயிரினங்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வதாகவும் இதனால் ஒரு சில யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும்
இப்பகுதி முழுவதும் இயற்கை வளங்கள் அழிந்து வருவதால் சிறு வன உயிரினங்கள் அளிக்கப்பட்டு வருகிறது
ஆகவே வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் இயற்கை வளங்களை வெட்டி எடுத்து விட்டால் தண்ணீருக்கு எங்கு செல்வார்கள் தற்போது கொடைக்கானல் கீழ் மழை பகுதிகளில் போதுமான மழை இல்லை தொடர்ந்து மர கொள்ளையர்கள் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மரங்களை வெட்டி அகற்றுவதால் அழிவின் விளிம்பில் கொடைக்கானல் கீழ் மழை பகுதி உள்ளது திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஆகவே தமிழக அரசும் தமிழக வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்தை காப்பாற்ற முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனத்துறை தமிழக துறை தலைவர் மற்றும் துணை துணை தலைவர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்திருந்தன அவர்களிடம் தொலைபேசியில் அழைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையான சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்துகின்றனர் மலைகளில் உள்ள இயற்கை அழித்து வருகின்றனர் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என கேட்ட பொழுது தற்போது திண்டுக்கல் அய்யலூர் பகுதிக்கு ஆய்வுக்கு வந்துள்ளோம் அங்கு தான் பார்க்க செல்கிறோம் செய்தியாளர் சந்திப்பு கிடையாது என்று கூறிவிட்டனர்.
வனப்பகுதிகளில் மரங்களை வெட்டுவதால், மரங்களின் வேர்கள் மண்ணைப் பிடித்துக் கொள்ளும் ஆற்றலை இழப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, நீர் பிடிப்புத் திறன் குறைந்து, மலைச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் மண்ணரிப்பு அதிகமாகி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படவும் வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல் மண் அரிப்பு மற்றும் நீர் பிடிப்புத்திறன் குறைவதால், மலைச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகவும் ஆபத்தானது.
காடழிப்பு, காலநிலை மாற்றம், பாலைவனமாதல், பல்லுயிர் இழப்பு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது.
மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைத்தையும் தருவது வனங்கள்தான். இன்னும் எப்படி எல்லாம் வனங்கள் நமக்குப் பயன்படுகின்றன.
மழை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு வனங்களின் உதவி அவசியம். மழை நீர் பூமிக்கு அடியில் சென்று நீரூற்றுகளில் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்கின்றது. மழை அளவு அதிகரிக்க உதவுகிறது. கால மாறுதல்களுக்கு முக்கிய பங்காற்றுகின்றன. காற்று மண்டலத்தின் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. மழை, புயல் போன்றவற்றால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுத்து மண் வளத்தை பாதுகாக்கப்படுகிறது.
வனம் மற்றும் காடுகள் அழிக்கப்படுவதால் நீரூற்றுக்கள் வறண்டு நதிகளில் நீரோட்டம் குறைந்து வறட்சி ஏற்படுகிறது. .நீரைத் தேக்கி வைக்கும் திறன் குறைவதால் மழைக்காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பொருள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்காண்டு வெப்பம் அதிகமாவது, பனிப்பொழிவு, தாங்க முடியாது வேகமாக வீசும் சூறாவளி ஆகிய இயற்கை பேரிடர்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி வனங்களைப் பாதுகாப்பதன் அவசியம். ஆகவே
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள அரிய வகை மரங்களை வெட்டும்போது நேரடி ஆய்வு செய்தால் மட்டுமே திண்டுக்கல் மாவட்ட மலைகளில் உள்ள அரிய வகை இயற்கை வளங்களை காப்பாற்ற முடியும்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும் காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.



