காவல் செய்திகள்

வைகை ஆற்றில் குளிக்க சென்ற  கல்லூரி மாணவன் மாயம்!
தேடி வரும் சமயநல்லூர் காவல்துறை மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர்!



தேனி மாவட்டம்
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு  27/10/25 அன்று 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், .  தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், ஆற்றில் இறங்குவதோ, குளிப்பதோ, அல்லது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
ஆனால் ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெள்ள அபாயத்தை உணராமல்  வைகை ஆற்றில் பொதுமக்கள்  குளிக்கச் செல்கின்றனர்.
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள  பாலிடெக்னிக் கல்லூரியில் EEE மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
குடும்பத்தில் வறுமையின் காரணமாக கல்லூரி படிப்பை மேற்கொண்டு  தொடர முடியாத சந்தோஷ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு   படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு நகரி வைரநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும்  தனியார் பார்சல் சர்வீஸில் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் வைகை ஆற்றில்
காலை 11 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக அருகில் இருந்தவர்கள்  சந்தோஷின்  தந்த ராஜாவிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே
இது குறித்து சந்தோசின் தந்தை ராஜா சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சந்தோஷை சமயநல்லூர் காவல்துறையினருடன்


சோழவந்தான் தீயணைப்பு  நிலைய அலுவலர் முத்துகுமரன் தலைமையில் மீட்புக் குழு வீரர்கள்  பவர் ஹவுஸ் பகுதிக்கு  விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்தோஷை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில்  மதியம் 2.மணி வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  சந்தோஷை  தீயணைப்பு வீரர்கள் தேடியும்  கண்டு பிடிக்க முடியாததால்  தொடர் தேடுதல் பணியில் தொய்வு காணாப்படுதாக கூறி சந்தோஷின் உறவினர்கள் பெண்கள் மதுரை திண்டுக்கல் சாலையில் திடீறென்று  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் மாணவனின் உறவினர்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் சிறிதுநேரம் மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில்
சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் இழுத்துச் சென்ற மாணவன் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button