அரசியல்

10 வருடத்திற்கு திமுக ஆட்சி தான்..! : 10 வருடம் காத்திருந்த தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா ஸ்டாலின் ?

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மாவட்டங்களில் பல்வேறு வேலைகளுக்காக அமைச்சரின் பரிந்துரை கடிதம் கேட்டு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருப்பதை கண்ணால் பார்க்க முடிகிறது.

தற்போது இருக்கும் அமைச்சர்கள் மாவட்டத்திலிருந்து வரும் கட்சி நிர்வாகிகள் கேட்கும் சின்ன சின்ன உதவிகளை செய்து கொடுத்தாலும் மாவட்ட நிர்வாகிக்களுக்கு கடந்த 10 வருடமாக ஆதரவாக இருந்து வந்த அரசு வேளையில் இருக்கும் உறவினர்கள் கேட்கும் வேலையை செய்து கொடுக்க அமைச்சர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசியும் எதுவும் நடக்கவில்லை என்று திமுக மாவட்ட நிர்வாகிகள் தங்கள் அதாங்கத்தை நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பி வருகின்றனர்.

இதன் உண்மைத் தன்மையை கண்டறிய நாம் களத்தில் இறங்கி விசாரித்த போது. தற்போது மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், RDO, DRO இந்த மூன்று உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் மாவட்டத்தில் அரசு வேலையில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் இருக்கிறார்கள்.


தற்போது மாவட்டங்களில் பணியில் இருக்கும் RDO, DRO இவர்கள் இரண்டு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் யார் பரிந்துரை செய்தாலும் காது கொடுத்து கேட்பதில்லை என்றும், அப்படியே கேட்டாலும் அதை நிராகரித்து விடுவதாகவும் திமுக மாவட்ட நிர்வாகிகள் சொல்லி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தில் திமுக கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள யாராவது பேசினாலும் அவர்களுக்கு சரியான பதில் கொடுப்பது இல்லை என்ற தகவலும் வந்துள்ளது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் தற்போது தமிழகத்தில் முதல்வர் பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் புதிதாக அரசு தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களை நியமித்தார். அவர்கள் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது அனைவரும் வெளிப்படைத்தன்மையாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கு யாராவது தடையாக இருந்தால் அதை முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதையே ஒரு காரணமாக வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் அவர்கள் எந்த ஒரு பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து வருவதாக தகவல் வந்துள்ளது.

மற்றொரு புறம்ஒரு சில மாவட்டங்களில் ஆட்சியாளர்களை தவிர துணை ஆட்சியர் ஆர்டிஓ இவர்கள் அனைவரும் இதற்கு முன்பு இருந்த அதிமுக அமைச்சர்களின் ஆதரவாளர்கள் என்று தகவல் வந்துள்ளது.

இதனால்தான் தற்போது உள்ள அமைச்சர்கள் தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான உதவி செய்து கொடுக்க பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பினால் கூட அதை RDO, DRO இரண்டு பேரும் நிராகரித்து வருவதாக தகவல் வந்துள்ளது.

பத்து வருடமாக எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் திமுக கட்சி கட்சி வெற்றிபெற்று முதல்வர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் இருந்த தொண்டர்கள் அதிமுக ஆட்சி இருந்தது போலவே தற்போதும் இருக்கிறது என்று
தங்களது தொகுதி அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது. இதனால், சில கட்சியினர், தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதங்களையும், கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

10 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் ஊழியர்கள் சிலர், தற்பொழுது திமுக அமைச்சர்களிடம் தங்கள் உறவினர்களுக்கு துறைரீதியான சில உதவிகளை கேட்டு வருகின்றனர் என்ற தகவல் வந்துள்ளது. ஆனால் அவர்கள் கேட்ட உதவிகளை எத்தனை ஊழியர்களுக்கு நடந்துள்ளது என்று தெரியவில்லை!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க, கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
சமீபத்தில், அறிவாலயத்தில் துணை அமைப்புச் செயலர் பதவி அன்பகம் கலைக்கு வழங்கப்பட்டது. இதனால், கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கிற ராஜ்யசபா எம்.பி., ஒருவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மாவட்டச் செயலர் பதவி வகித்து வரும் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பதவி வகிக்காத அமைச்சர்கள், 10 பேர் தவிர்த்து, மீதமுள்ள 24 அமைச்சர்களிடம் மாவட்டச் செயலர் பதவி நீடிக்கிறது.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற பார்முலா அடிப்படையில், 24 அமைச்சர்களிடம் இருந்து, மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட உள்ளது. இளைஞரணி செயலர் உதயநிதி அவர்களின் செயல்பாட்டிற்கு, அவரது வயதுக்கு ஈடு கொடுக்கக் கூடியவர்களின் பெயரை புதிய மாவட்டச் செயலாளர்கள் பெயர் பட்டியலில் சேர்த்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.அதில் புதுமுகங்களும், அ.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,வில் இணைந்த முக்கிய பிரமுகர்களும், இளைஞர்களும் இடம் பெற வாய்ப்பு உள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-

ஒருவருக்கு ஒரு பதவி என்ற ‘பார்முலா’ அடிப்படையில், கட்சிப்பணி, ஆட்சி பணி என இருக்கும் தி.மு.க., அமைச்சர்களாக இருக்கும் 24 மாவட்டச் செயாளர்களிடம் திமுக தலைவர் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க.,வில், அமைப்பு ரீதியாக, 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக வெற்றி பெற ஏதுவாக இருக்கும்.

சில மாவட்டங்கள் மாஜி அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா..?


விருதுநகர், ராமநாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையும் நாம் மறந்துவிட முடியாது! எது எப்படியோ திமுக தலைவர் ஸ்டாலின் 10 வருடம் முதல்வராக ஆட்சியில் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


நடக்க இருக்கும் நகராட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை அடையும். அதற்கு முக்கிய பங்காக மாவட்டச் செயலாளர்களும் இருக்க வேண்டும் இருப்பார்கள் அப்படி இருந்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கட்சித் தலைவர் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது முதல்வராக இருக்கும் முக ஸ்டாலின் நிறைவேற்ற முடியும், நிறைவேற்றுவார் என்று திமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button