100 பயனாளிகளுக்கு ரூ.12,82,241/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெற்ற மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை (வுநேபுயு) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஓவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (ளுஆளு) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.3,78,241/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், 38 பயனாளிகளுக்கு ரூ.4,56,000/- முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும், 10 பயனாளிகளுக்கு ரூ.88,000/- மதிப்பிலான திருமண உதவித்தொகைகளையும், 16 பயனாளிகளுக்கு ரூ.3,60,000/- மதிப்பிலான இயற்கை மரணம் உதவித்தொகைகளையும், 13 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவுகளையும் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.12,82,241/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 14 நிதிக்குழு மான்யம் திட்டத்தின் மூலம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மிதலைக்குளம் ஊராட்சியில் அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் ரூ.4.5 இலட்சம் மதிப்பில் புதிதாக போர்வெல் அமைத்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டுவதற்கும், அம்பனேரி கிராமத்தில் ரூ.4.5 இலட்சம் மதிப்பில் புதிதாக போர்வெல் அமைத்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டுவதற்கும், சூச்சனேரிபட்டி கிராமத்தில் ரூ.4.5 இலட்சம் மதிப்பில் புதிதாக போர்வெல் அமைத்தல் மற்றும் குளியல் தொட்டி கட்டுவதற்கும், புலிக்குறிச்சி கிராமத்தில்ரூ.6 இலட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுதல் மற்றும் பைப்லைன் அமைப்பதற்கும், பண்ணை மூன்றடைப்பு ஊராட்சியில், பி.எம்.புதுப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் காலணியில் ரூ.9.15 இலட்சம் மதிப்பில் புதிதாக போர்வெல் அமைத்தல் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தெப்பலான்கரை கரை கிராமத்தில், ரூ.27.8 இலட்சம் மதிப்பில் தெப்பலான்கரை முதல் வடக்கு நத்தம் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைப்பதற்கும், தமிழ்பாடி கிராமத்தில் ரூ.7.1 இலட்சம் மதிப்பில் பிள்ளையார் நத்தம் முதல் சாமிநத்தம் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைப்பதற்கும், கீழ்கண்டமங்கலம் கிராமத்தில் ரூ4.66இலட்சம் மதிப்பில் பாலம் கட்டுவதற்கும், கீழ்கண்டமங்கலம் கிராமதத்தல் ரூ.1.60 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், உழுத்திமடை கிராமத்தில் முகவூர் ஆதிதிராவிட காலணியில் ரூ.8.55 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைப்பதற்கும், உழுத்திமடை கிராமத்தில் முகவூர் ஆதிதிராவிட காலணியில் ரூ.6.30 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், உழுத்திமடை கிராமம், மேற்கு காலணியில் ரூ.5.21 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைப்பதற்கும், உழுத்திமடை ஊராட்சி, செங்கமடை கிராமத்தில் பள்ளர் தெருவில் ரூ.5.10இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கும், உச்சனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு ரூ.9.85 இலட்சம் மதிப்பில் 183 மீட்டர் சுற்றுசுவர் அமைப்பதற்கும், பிள்ளையார்குளம் ஊராட்சி, களத்தூர் கிராமத்தில் ரூ.11.72 இலட்சம் மதிப்பில் மயானத்திற்கு அருகில் 283 மீட்டர் சிறு பாலம் அமைப்பதற்கும், வரிசையூர் ஊராட்சி, உசிலங்குளம் கிராமத்தில் ரூ.6.2 இலட்சம் மதிப்பில் கதிரடிக்கும் களம் அமைப்பதற்கும் ஆக மொத்தம் 17 பணிகளுக்கு ரூ.1,31,56,000ஃ- மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதியையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை மண்டல மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, விருதுநகர் மண்டல பொது மேலாளர் ஆர்.சிவலிங்கம், விருதுநகர் மண்டல வணிக மேலாளர் க.மாரிமுத்து, திருச்சுழி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.