12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! புகார் கொடுத்தும் கைது செய்ய தயங்கும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! கைது செய்ய தயங்கும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, பெண்ணின் வயது 18 ஆகவும், ஆணிண் வயது 21 ஆகவும் இருக்க வேண்டும். 1872 இல் இயற்றப்பட்ட இந்தியக் கிறிஸ்தவத் திருமணச் சட்டத்தின்படி, திருமணத்திற்கு ஆண் 21 வயதுக்குக் குறையாமலும், பெண் 18 வயதுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.
குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக செயல்படுத்தி வந்தாலும், சில சமூகங்களில் இந்த நடைமுறை இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தருவது அரசின் கடமை மட்டுமில்லை, சமூகத்தில் இருக்கும் நமது அனைவரின் கடமையாகும்.
எனவே உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள்
போன்ற இடங்களில் நேரடியாக சென்று புகார்
அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை கட்டாயப்படுத்தப் பட்டாலோ, அச்சுறுத்தினாலோ அல்லது குழந்தைத் திருமணத்திற்கு வஞ்சிக்கப்படுவதாலோ அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, குழந்தைக்கு உடனடி பாதுகாப்பு அளிக்கப்பட்டு, குழந்தை CWC முன் ஆஜர் படுத்தப்படும்.
காவல்துறை புகார் பதிவு செய்தல் மற்றும் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தல் உட்பட நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. குழந்தைகள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவு உள்ளிட்ட அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குதல். குழந்தை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதை உறுதி செய்தல்; ஆதாரம் மற்றும் குறுக்கு விசாரணை ஆகிய இரண்டும் முடிந்தவரை ஒரே நாளில் நடைபெற வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள்.
சில தினங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக பெண்ணின் தந்தை புகார் கொடுத்தும் விதிமுறை களை மீறி செயல்பட்டு வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இது சம்பந்தமாக ரிப்போர்டர் விஷன் புலனாய்வு பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்த அதிர்ச்சி தகவல் பின்வருமாறு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா
பள்ளபட்டி
(கவுண்டன் பட்டி மெயின் ரோடு) அண்ணா நகர், இந்த முகவரியில் வசிக்கும் கோபால் (வயது 45 )தகப்பனார் பெயர்
சுப்பையன் ஆசாரி மனைவி பெயர் மகேஸ்வரி இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தைக்கு 19 வயதும் இரண்டாவது பெண் குழந்தைக்கு 17 வயதும் மூன்றாவது பெண் குழந்தைக்கு 15 வயதும் நான்காவது பெண் குழந்தைக்கு (13 வயதும்)ஆகிறது.
இதில் இரண்டாவது பெண் குழந்தை 17 வயது அங்கு லட்சுமி கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக பெண்ணின் தந்தையின் மைத்துனர் வீட்டில் தங்கி அருகில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து பள்ளபட்டியில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டிற்கு அங்கு லட்சுமி வந்துள்ளார்.
கடந்த 23/01/2024 அன்று காலை 7 மணியிலிருந்து காணவில்லை என்று தனது உறவினர் வீடுகளில் உங்கள லட்சுமி தந்தை தேடிப் பார்த்துள்ளார் எங்குமே அங்கு லட்சுமி வரவில்லை என்று கூறியுள்ளார்கள் .
அதன் பின்பு பள்ளபட்டி முழுவதும் விசாரித்த போது பள்ளப்பட்டி வேலாயுதபுரத்தில் வசிக்கும் ராமு என்பவரின் மகன் அழகு ராஜா( வயது 20) பெரியகுளம் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் வருகிறார். பள்ளபட்டி வீட்டிலிருந்த அங்கு லட்சுமியை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்கள். உடனே
24/ 1 /2024 அன்று அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் அங்கு லட்சுமியை மைனர் பெண்ணை ராமு மகன் அழகு ராஜா கட்டாயப்படுத்தி கடத்திச் உள்ளதாகவும் உடனடியாக மைனர் பெண்ணான என் மகளை கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அங்கு லட்சுமியின் தந்தை.
புகாரின் அடிப்படையில்
இன்று 28 /1 /20 24 அன்று மைனர் பெண்ணை கடத்திச் சென்ற அழகு ராஜாவின் தந்தை தாய் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் மைனர் பெண்ணான ஐந்து லட்சுமியை 23 1 2024 அன்று காலை 7 மணிக்கு இரண்டு சக்கர கொண்டு கோயமுத்தூர் வடவள்ளியில் உள்ள நண்பரது வீட்டில் அங்கு லட்சுமியை தங்க வைத்துவிட்டு மீண்டும் இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளபட்டிக்கு வந்து இரண்டு சக்கர வாகனத்தை விட்டு விட்டு இரவாக மீண்டும் கோயம்புத்தூர் வடவள்ளிக்கு அழகுராஜா சென்று அங்கு மூன்று நாள் அழகு ராஜாவும் மைனர் பெண்ணான அங்கு லட்சுமியும் நண்பர் வீட்டில் இருந்ததாகவும் .
மைனர் பெண்ணை கடத்திச் சென்ற அழகு ராஜாவின் உடன் பிறந்த சகோதரர் அழுகு ராஜாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக பெண்ணை அழைத்துக் கொண்டு அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்துக்கு வரும்படி தெரிவித்துள்ளார் அதன்படி கோயமுத்தூரில் இருந்து அழகுராஜா மைனர் பெண்ணை அழைத்துக் கொண்டு அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள். காவல் நிலையத்தில் மைனர் பெண்ணான அங்குலட்சுமியை பெண் காவலர் இருக்கும் அறையில் தனியாக அமர வைத்து விட்டு.
அழகுராஜாவை விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மைனர் பெண்ணான அங்கு லட்சுமி பெற்றோர்களிடம் செல்வதற்கு சம்மதித்துள்ளார்.ஆனால் காவல் நிலையத்தில் மைனர் பெண்ணை கடத்திச் சென்ற அழகுராஜா மீது வழக்கு பதிவு செய்யாமல் மைனர் பெண்ணை அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைத்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதன் பின்பு மைனர் பெண்ணை கடத்திச் சென்ற அழகுராஜா மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரை காப்பாற்றும் நோக்கத்தில் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் கணிசமான தொகையை கையூட்டாக பெற்றுக் கொண்டு கடத்திச் சென்ற நபரையும் அவர்களது பெற்றோர்களையும் அனுப்பி விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அதன் பின்பு அழகுராஜா என்பவர் வீட்டில் உள்ள மைனர் பெண்ணான தன் மகள் அங்கு லட்சுமியை பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் எங்களை குடும்பத்திற்கு அது ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மறைமுகமாக அச்சுறுத்தி வருவதாகவும்
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு மீண்டும் தகவல் தெரிவித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மைனர் பெண்ணான தன் மகளுக்கு எங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தி வரும் கடத்திச் சென்ற அழகுராஜா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் மைனர் பெண்ணான தன் மகள் மற்றும் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டியும்
திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு
புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்பு காவல் துறையினர் பெண்ணிடம் தீர விசாரணை மேற்கொண்டததில் கோயமுத்தூர் வடவள்ளியில் தங்களது உறவினர் வீட்டில் இருந்து 23 /01/2024 கடைக்கு பொருள் வாங்க சென்ற போது ஸ்கூட்டரில் வந்த அழகுராஜா என்னை அழைத்துச் சென்றார் என்று கூறியதால் திண்டுக்கல் மாவட்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோயமுத்தூரில் என்னை அழைத்துச் சென்றதால் கோயமுத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறியுள்ளார் அதன்படி கோயமுத்தூர் ஆர் எஸ் புரம் மகளிர் காவல் நிலையத்தில் 04/02/2024 அன்று அங்கு லட்சுமி மற்றும் அவரது தந்தை புகார் கொடுத்துள்ளனர் அந்த புகாரி பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வந்தேன் அப்போது பத்தாம் வகுப்பு முடித்து விடுமுறை இல் எங்கள் வீட்டில் அருகே வசித்து வந்த அழகுராஜா என்னை காதலிப்பதாக கூறினார். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடியும் வரை என்னை காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்தார் இதனால் 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் எங்களது வீட்டில் என்னுடைய பாதுகாப்பு நலன் கருதி என்னை கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு 20/11/2023 அன்று அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் கடந்த மூன்று மாதங்களாக கோயமுத்தூர் வடவள்ளியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 21/01/2024 அன்று நாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே இருக்கும் சாஸ்தா மளிகை கடைக்கு பொருள் வாங்க சென்றேன் அப்போது அழகுராஜா ஒன்று ஒருவர் நின்று கொண்டிருந்ததை பார்த்து விட்டு நான் தெரிந்தும் தெரியாமல் வீட்டுக்கு சென்று விட்டேன் அதன் பின்பு 23 1 2024 அன்று மாமா வேலைக்கு சென்று விட்டார் அத்தை தன் மகள் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் நான் மதியம் வீட்டிற்கு சமையல் செய்வதற்கு கடைக்கு பொருள் வாங்க மதியம் 2 மணிக்குச் சென்று அப்போது மீண்டும் அந்த கடை அருகே அழகுராஜா கருப்பு ஸ்கூட்டரில் வந்து என்னுடன் வந்துவிட இல்லையென்றால் உங்கள் வீட்டில் உங்கள் அம்மா அப்பா மீது ஆசை தொகுத்து விடுவேன் என்று மிரட்டி என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவரது உறவினர் வீடு என்று அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றார் அங்கு ஒரு பெண் ஒரு ஆண் இருந்தார்கள் அவர்கள் யார் என்று தெரியவில்லை நாங்கள் போனதும் அழகுராஜா அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர்கள் வீட்டு மாடிக்கு சென்று விட்டனர் அதன் பின்பு என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். அதன் பின்பு மறுநாள் பழனி முருகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து என் கழுத்தில் மஞ்சள் கயிறை ஒன்றை கட்டினார். அதன் பின்பு மீண்டும் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அன்று இரவு முழுவதும் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். மறுநாள் காலையில் அழகராஜா அண்ணன் அழகுராஜாக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு லட்சுமி காணவில்லை என்றும் நீ தான் கடத்திச் சென்று விட்டதாக அங்கலட்சுமியின் தந்தை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனால் அம்மா அப்பா இரண்டு பேரும் காவல் நிலையத்தில் இருப்பதால் நீ உடனே அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அம்மைய நாயக்கர் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார். உடனே என்னை அழைத்துக் கொண்டு அழகுராஜா அம்மையநாயக்கன் காவல் நிலையத்திற்கு வந்தார் அங்கு காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் இது கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் என்பது கோயம்புத்தூரில் சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் என கூறியதால் நான் கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின்பு மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உடனே அழகுராஜா எங்கே இருக்கிறார் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு உடனே பள்ளபட்டியில் இருந்து அழகுராஜா கோயம்புத்தூரில் இருந்து காவல்துறையினர் வந்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில் அழகுராஜா கொடுத்த புகைப்படம் வீடியோக்களை ஆதாரங்களை கொடுத்துள்ளார். அதன் பின்பு அழகு ராஜாவை கைது செய்யாமல் அழகு ராஜாவை காவல் நிலைய ஜாமினில் அனுப்பி விட்டுள்ளனர்.
எது எப்படியோ குழந்தை திருமணத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் எத்தனை சட்டங்களை கொண்டு வந்தாலும் இது போன்று மைனர் பெண்களை கடத்திச் சென்று உடலுறவு வைத்துக் கொண்டு திருமணம் செய்ததாக ஏதாவது ஒரு கோயிலில் பெண்ணின் கழுத்தில் ஒரு மஞ்சல் கயிறு கழுத்தில் கட்டி விட்டு திருமணம் செய்து விட்டோம் என காவல் நிலையத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கூறி நூதன முறையில் இளம் பெண்களை ஏமாற்றி செய்த தவறில் இருந்து தப்பித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ பெண்களை ஏமாற்றி மிரட்டி காதலித்து தன் வலையில் சிக்க வைத்து திருமணம் செய்ய நினைப்பவர்கள் மீது பெண்கள் மற்றும் பெண்களின் பெற்றோர்களின் நலன் கருதி சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.