பழைய சினிமா டிக்கெட்டுகளை வைத்து படம் ஓட்டும் தமிழ்நாடு பிஜேபி
தேர்தலுக்குப் பின்பு தமிழக அரசியல் ஒரு வழியாக தெளிவடைந்து வருவதை தற்போதைய நடைமுறை காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன…
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் துரிதமான செயல்முறையும் தேவையற்ற விளம்பரங்களை தவிர்ப்பதும் மிகச் சிறப்பான முறையில் சிறப்பாக செயல்படுகிறார்… .. அவருக்கு பக்கபலமாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபிக்கிறார்… அவரின் நடவடிக்கைகள் இன்னும் சிறப்பாக இருக்கிறது… இதையே தொடர்ந்து செயல்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் திமுக தான் என்பதை தெளிவாக புரிய வைத்துவிட்டார்கள்.
பாஜக கட்சி மட்டும்தான் அதிரப் பழைய கோமாளித்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது, அதிலொரு கோமாளித்தனம் இந்த செல்லாக் காசாக மாறிவிட்ட திரைப்படத் துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் சில பேர் அலப்பறை…… … பார்க்க சகிக்கவில்லை
எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரு கிராமிய நிகழ்ச்சி பாண்ட் குழு, ஒரு கரகாட்ட குழு, ஒரு நடனக்குழு, நாடக குழு எல்லாம் வைத்திருப்பார்கள்,
ஆனால் பாஜகவில் மட்டும் அந்த நாட்டுப்புற கலைஞர்களை ஓரம் தள்ளி, பழைய சினிமா டிக்கெட்டுகளை வைத்து அந்த இடத்தை நிரப்பி விட்டார்கள் ,..
பாவம் அந்த ஏழை கலைஞர்கள் வாழ்விலும் மேலும் வறுமையை தந்தார்கள்.. இந்தப் பேராசை சினிமாக்காரர்களும் பாசிஸ்ட்டு களும்…. நல்ல அரசியல் எதுவோ…. மக்களுக்கு எது நன்மை செய்கிறதோ… மேன்மை செய்கிறதோ அதுவே நமது கட்சி… திமுகவுக்கு பக்கபலமாக இருப்போம்… திமுக அமைச்சர்களையும் தலைவர்களையும் வாழ்த்துவோம்…தமிழன் நாஞ்சில் சாம்ஸ்…. அண்ணே இனிமேல் இது மாதிரி போடுங்க
தமிழன் நாஞ்சில் சாம்ஸ்.