காவல் செய்திகள்
33 கர்ப்பிணி பெண்காவலர்களுக்குமுதல் தவணை கொரோனா தடுப்பூசி!
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் முயற்சியால் இன்று 13.08.202 காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவேரி மருத்துவமனை முன்களப் பணியாளர்களால் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் சென்னை பெருநகர ஆயுதப்படையில் பணிபுரியும் 33 கர்ப்பிணி பெண்காவலர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். அவர்களுக்கு ஆயுதப்படையின் சார்பாக வாழ்த்துக்கள்!
மேலும் இவர்களைப் போன்று மற்ற கற்பிணி பெண் காவலர்களும் காலதாமதமின்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.