ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து தயாரிக்கும்
போலி மது பாட்டில் மது பானக் கூடங்களில் விற்பனை! அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் குளித்தலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

கரூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக கரூர், குளித்தலை என 2 வருவாய் கோட்டங்கள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகழூர் என 7 வருவாய் வட்டங்கள், குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் என 3 நகராட்சிகள், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், புலியூர், 8 பேரூராட்சிகள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் கரூர் மக்களவைத் தொகுதி உள்ளடக்கிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் கரூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மேற்கே ஒட்டன்சத்திரம் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளும், கிழக்கே கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், வடக்கே மொடக்குறிச்சி மற்றும் கபிலர் மலை ஆகிய தொகுதிகளும், தெற்கே ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.
அதேபோல் குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனுங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள் உள்ளன அதேபோல் கரூர் மக்களவைத் தொகுதியில் கடவூர் வட்டம், , 23 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.
வையாளிமடை
நவக்குளம்
சங்கிபூசாரியூர்
தரகம்பட்டி ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டத்தின் கீழ் சின்னதாராபுரம் மற்றும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி என 3 உள்வட்டங்களும், 40 வருவாய் கிராமங்களும் உள்ளது. வட்டத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகள் உள்ளது.
இப்பகுதியில் நூற்பாலைகள் அதிகளவில் இருக்கிறது.
ஆகையால் தினக்கூலி வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் அதிகமாக வசிக்கிறார்கள். குறிப்பாக குவாரிகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் குவாரிகளில் அதிகமாக
அன்றாட கூலி வேலைக்குச் சென்று வரும் தொழிலாளிகள் தங்களது உடல் வலியை போக்குவதற்காக மது பாட்டில் வாங்கி அருந்தி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அப்பகுதியில் இரவு நேர கூலி வேலைக்கு சென்று வருபவர்கள் அதிகாலையிலேயே மது பாட்டில்கள் வாங்கி குடிப்பது வழக்கமாக உள்ளனர் .
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு


குளித்தலை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 20 க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடை மதுபானக்கூடங்களில்

போலி மது பாட்டில்களை தங்கு தடையின்றி அதிகாலை முதலே படுஜோராக பணி செய்து இந்த சட்ட விரோத செயலை தடுக்க வேண்டிய குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட . கடவூர் காவல் நிலையங்கள் உள்ள காவல்துறையினரின் அனுமதியுடன் போலி மது பாட்டில் விற்பனை
காலை 7:00 மணி முதல் நடைபெறுகிறது என்றால் நம்ப முடிகிறதா!? நம்பித்தான் ஆக வேண்டும்!
ஏனெனில் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கடவூர் தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்




தரகம்பட்டி மதுபானக்கூடங்களில் -இரவு 10 மணிக்கு மேல் மறுநாள் மதியம் 12 மணி வரை 14 மணி நேரம் மேற்கூறிய பகுதிகளில் போலி மது பாட்டில்கள் அதிக விலைக்கு கள்ளத்தனமாக தங்கு தடையின்றி அமோகமாக விற்பனை நடைபெறுவது 100 சதவீதம் உண்மை.
இது சம்பந்தமாக பலமுறை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதுமட்டுமில்லாமல் கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரே இல்லை என்றும் ஒரே ஒரு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் காவல் ஆய்வாளரை சில மாதங்களுக்கு முன்புதான் நியமித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பல நாட்களாகவே போலி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பத்திரிகை அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இது சம்பந்தமாக அந்தப் பகுதியில் உள்ள மதுபானக்கூடங்களில் போலி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுகிறதா என நமது செய்தி குழுவினர் காலை 7 மணி முதல் 11:30 மணி வரையிலான இடைப்பட்ட பகுதியில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மதுபானக்கூடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது முற்றிலும் உண்மையாகவே தெரிந்தது.
மேலும் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா தெரிந்துகொள்ள ஒவ்வொரு மதுபானபார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது பாட்டில்களுக்கும் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்வதை மதுபானக்கூடங்களில் வைத்துள்ள (phone pay)
(G pay) பணம் செலுத்தி மது பாட்டில்களை வாங்கி
உறுதி செய்து அதை ஆதாரமாக வைத்துக்கொள்ளப்பட்டதுஅது மட்டும் இல்லாமல்
போலி மது பாட்டில்களை விற்பனை செய்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தரகம்பட்டி மதுபானக்கூடங்களில் சூதாட்டம் நடப்பதாகவும் அதற்கு தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தமாக பகுதி மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாகவும் அந்த புகாரின் மீது கடவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காமல் மதுபான கூட உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கரூர் மாவட்டத்தின்

அரவக்குறிச்சி குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கடவூர் வட்டத்திற்குட்பட்ட ஈசநத்தம் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக தயாரிக்கும் போலி மதுபானங்களை மதுபானக்கூடங்களுக்கு சப்ளை செய்து சட்ட விரோதமாக விற்கப்படுவதாக பொதுமக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் கூறுகையில் அரவக்குறிச்சி பகுதியில்
ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து பழைய மதுபாட்டில்களில் அடைத்து
கள்ள மதுபான ஆலை செயல்படுவதாகவும் அங்கிருந்து போலி மது பாட்டில்கள் அரவக்குறிச்சி குளித்தலை கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தரகம்பட்டி மதுபானக்கூடங்களில் சப்ளை செய்து வருவதாகவும் அதுமட்டுமில்லாமல் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மார்க் மதுபானக் கூடங்களுக்கும் அனுப்பப்படுகிறது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் சிறு சிறு குழுக்களாக பிரித்து குக் கிராமங்களிலும் விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆந்திரா பகுதியிலிருந்து நூற்பாலைகளுக்கு வரும் லாரிகளில் போலி மதுபான பாட்டில்களை கடத்தி கரூர் மாவட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டு அரசு டாஸ்மாக் பார்களில் விற்கப்படுவதாகவும். அதிகாலையில் குடிமகன்கள் மது பாட்டில் வாங்க வருவதை சாதனமாக பயன்படுத்தி இந்த போலி மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாகவும்
அதை வாங்கி குடிக்கும் அப்பாவி பொதுமக்கள் தொண்டையில் ஒரு மாதிரி கரகரப்பு ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து வாங்கி குடிக்கும் பல பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
இதுபோல கள்ளத்தனமாக போலி மது பாட்டில் விற்பனை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் இல்லையா என மதுபான கூட உரிமையாளர்களிடமோ அல்லது பணியாளர்களிடமோ கேட்டால் அமைச்சர்களின் பினாமி பார் என கேட்பவர்களை அச்சுறுத்தும் வகையாக பதில் அளிக்கின்றனர்.
அமைச்சர்களின் பினாமி பார் என்று கூறி வருவதால் மதுவிலக்கு காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சட்ட விரோத மதுபாட்டில் விற்பனை செய்பவர்கள் ஆளும் அரசியல் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சருக்கு அவப்பெயரை உண்டாக்குவதும் மட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது வேதனையாக இருப்பதாக.
உண்மையான திமுக கட்சித் தொண்டர்களும் விசுவாசிகளும் பொது மக்களும் பரவலாக பேசத் தொடங்கியுள்ளனர்.
எது எப்படியோ போலி மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டிய கரூர் மற்றும் குளித்தலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டிற்கு பொதுமக்கள் நலன் கருதி விரோதமாக தயாரிக்கும் போலி மது பாட்டிலில் தயாரித்து விற்கப்படுவதை தடுத்து நிறுத்த

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!!




