காவல் செய்திகள்

கட்டிய மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை விட்டு வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டு கொலை மிரட்டல் விடுவதாக  கல்லூரி உதவி பேராசிரியர் மீது புகார் !
நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் ! மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்  தென்மண்டல ஐ ஜி நடவடிக்கை எடுப்பார்களா,!?

பெண்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும்  அவர்கள் மீது விரைந்து வாடிக்கை எடுத்து முடிக்கவும், குறிப்பாக பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது தாமதமின்றி உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும்
ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள அனைத்துப் புகார்களின் மீதும் உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் டிஜிபி உத்தரவை

உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வசந்தா மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு  அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலைவாணி Msc,B.Ed
வயது 26 (கணவர் பெயர் சதீஷ்.) இவர் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அரசு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 26/07/26 அன்று உசிலம்பட்டி மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வசந்தா அவர்களிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் கடந்த 2010 ஆம் ஆண்டு  அருள் ஆனந்தர் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்த போது அந்த கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்த

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி செய்யும் சதீஷ்

சதீஷ் என்பவர் என்னிடம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி என்னை திருமணம் செய்வதாக மதுரையில் உள்ள தல்லாகுளம் முருகன் கோவிலில் கணவர் சதீஷின் தந்தை சண்முகம் சதீஷின் தாய் தவமணி சதிஷ் உடன் பிறந்த சகோதரர் தினேஷ் சதீஷின் தங்கை ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின்பு என் கணவர் சதீஷ் மற்றும் அவரது தாய் தந்தை தம்பி தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வந்ததாகவும்  அதன் பின்னர் பெண் குழந்தை பிறந்து இந்த மாதங்களிலேயே சதீஷின் தாய் தந்தை ஆகிய இருவரும் நகை பணம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதுமட்டுமில்லாமல் ஆண் குழந்தை வேண்டும் உன்னால் ஆண் குழந்தை பெற்று தர முடியாது நீ செத்துப் போ என்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தினமும் என்னை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி கணவர் சதீஷ் எனது மாமனார் மாமியார் கொழுந்தன் நாத்தனார் ஆகியோர் சேர்ந்து எழுத முடியாத வார்த்தைகளால் என்னை அசிங்கமாக பேசியதில் மனம் உடைந்து என்னுடைய குழந்தையுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்லும்போது என்னுடைய பெரியப்பா என்னை ஆறுதல் கூறி அழைத்துச் சென்று என்னையும் என் குழந்தையும் சேர்த்து அவரது வீட்டில் வைத்திருந்தார்
அதன் பின்பு செக்கானூரணியில் உள்ள எனது சித்தி வீட்டில் வசித்து வந்தேன் அதன் பின்பு உசிலம்பட்டியில் உள்ள எனது அத்தை பேச்சியம்மாள் வீட்டில் வந்து நானும் என் குழந்தையும் தங்கி இருந்தோம் எனது அப்பா அம்மாவிற்கு எனது நிலை தெரிந்து என்னை வந்து வீட்டிற்கு கூட்டிச் சென்று இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது எனது கணவர் என்னிடம் வந்து எனது குடும்பத்தினர்கள் எனக்குத் தெரியாமல் உன்னை துன்புறுத்தி விட்டதாகவும் நாம் இரண்டு பேரும் உங்கள் வீட்டில் சேர்ந்து வாசிப்போம் என்றும் நான் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை உங்கள் வீட்டில் சொல்லி எனது படிப்பிற்கு செலவு செய்ய சொல்லு நான் வேலைக்குச் சென்ற பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார் நானும் எனது பெற்றோரிடம் சொன்னேன் எனது பெற்றோர் தாய் வீட்டு சீதனமாக 70 பவுன் நகைகள் எனக்கும் 10 பவுன் நகை கணவருக்கும் போட்டார்கள் .அதன் பின்னர் என் கணவர் என்னிடம் 30 பவுன் நகை வாங்கி மதுரைக்கு கொண்டு சென்று அவருக்கு தெரிந்த இடத்தில் விற்பனை செய்து விட்டதாகவும் அந்த பணத்தை அவரது படிப்பிற்கு செலவு செய்து விட்டதாக நீதான் நகைகளை கேட்டபோது என் கணவர் முன்னுக்கு மாறாக பதில் சொன்னதால் எனக்கு சந்தேகம் என்று மாமனார் எனது மாமியார் எனது கொழுந்தனாரிடமும் சொன்னபோது உன் 80 பவுன் நகையும் நாங்கள் எனது மகளுக்கு செய்த பணத்தையும் வரதட்சணை கொண்டு வந்ததால் உன்னை சேர்ந்து வாழ விடுவோம் இல்லை என்றால் எனது மகனை வேறு நல்ல பெண்ணை பார்க்கச் சொல்லி உள்ளோம் என்றும் தனியாக செத்து விடு இல்லை நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னை மருந்தை ஊற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அதை பெரிது படுத்தாமல் என் பெற்றோருக்கு தெரியாமல் வாழ்ந்து வந்தேன். இந்த சூழலில் 2016 ஆம் வருடம் எனது கணவருக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தால் என்னுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துவார் என்று நினைத்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உதவி பேராசிரியர் பதவி இருப்பதை தெரிந்து கொண்டு அந்த வேலையை என் கணவருக்கு வாங்குவதற்காக 40 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இது சம்பந்தமாக என் கணவரின் மாமனார் மாமியாரிடம் கூறிய போது என்னுடைய மகன் உன்னை விட்டு வந்தால் அவனுக்கு ஒரு கோடி ரூபாய் கூட நாங்கள் கொடுத்து வந்த வேலையை வாங்குவோம் ஆனால் நீ அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் உன்னுடைய அம்மா அப்பாவிடம் சொல்லி 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கல்லூரியில் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையில் உதவி பேராசிரியர் வேலை வாங்கி கொடுத்ததாகவும் அந்த பணத்திற்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டி வந்ததாகவும் அதன் பின்பு எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது எனது தம்பிகளுக்கு திருமணம் நடந்ததால் நாங்கள் தனித்தனியாக உசிலம்பட்டி காலை தேவர் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தோம் எனது கணவர் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்வதாக என்னிடம் சொல்லிவிட்டு வேறு பெண்களுடன் தவறான பழக்கத்தில் இருந்து வந்ததாகவும் அதன் பின்னர் மேட்ரிமோனி மூலமாக தொலைபேசி எண்களை வாங்கி வேறு பெண்களுடன் பேசி வந்ததாகவும் எனக்கு தகவல் வந்ததை அடுத்து ஒரு நாள் என் கணவர் பயன்படுத்தி வந்த லேப்டாப்பை பார்த்த போது அதில் வேற பெண்களுடன் என் கணவருக்கு தொடர்பு இருப்பதை தெரிந்துகொண்டு எனது மாமனார் மாமியார் இடம் கேட்டபோது அவர்கள் என்னுடைய மகனுக்கு தஞ்சாவூரில் நர்ஸ் வேலை பார்க்கும் மகள் கீதாவுக்கு என் மகனை திருமணம் செய்து வைக்கப் போகிறோம் நீ வேண்டுமென்றால் அந்த பெண்ணிடம் பேசிக்கொள் என்று கூறி விட்டார்கள். உடனே கீதாவிடம் தொலைபேசியில் பேசிய போது அவர் என் கணவரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் உனக்கு என்னுடைய சின்னம்மாவிடம் சொல்லி பணம் தர சொல்கிறேன். கணவரை மீச்சுவல் டைவர்ஸ் கொடுத்து விலகிவிடு இல்லை என்றால் நாங்கள் உன்னை சத்தம் இல்லாமல் கொலை செய்து விடுவோம் என்று சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார் நான் கீதாவிடம் பேசிய விபரம் தெரிந்து 2026 ஜூலை மாதம் ஏழாம் தேதி எனது கணவர் வீட்டிற்கு வந்து என்னை தகாத வார்த்தையில் அசிங்கமா அசிங்கமாக பேசி உன்னை காதல் செய்ததால் என்னோட வாழ்க்கையே போச்சு உன்னை கல்யாணம் முடித்த நாளிலிருந்து உங்கள் குடும்பத்தில் நாங்கள் கேட்ட வரதட்சனை கொடுக்கவும் முடியல இன்னும் ஒரு வீடு கூட வாங்கி தர மாட்டீங்க இதனால் நான் கீதாவை திருமணம் செய்து கொண்டேன் ஒழுக்கமாக எனக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு ஓடிவிடு என்று கோபமாக பேசிக்கொண்டு அருகில் கிடந்த துப்பட்டாவை எடுத்து என் கழுத்தில் சுற்றி ஒன்று தூக்கி தொங்க விட்டு நீ தற்கொலை செய்து கொண்டதாக ஊரை நம்ப வைத்து விட்டு தப்பித்துக் கொள்வேன்.
உன்னை கொலை செய்ய நானும் கீதாவும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம் என்று சொல்லி என்னை காலால் மிதித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு அனைத்து உதைத்து துன்புறுத்தியதாகவும் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் அழுது கூச்சலிட்டதால் உன்னை நான் உயிரோடு விட்டு  விடுகிறேன். எனக்கு மீச்சுவலாக டைவர்ஸ் கொடுத்து விடு என்று சொல்லி என்னை கீதாவுடன் வாழ விடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆகவே என்னை காதலித்து திருமணம் செய்து அதை பணம் அனைத்தையும் வாங்கிக் கொண்டு குழந்தைகளின் பெற்றுக் கொண்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட உசிலம்பட்டி மகளிர் காவல் ஆய்வாளர் வசந்தா சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரேணுகாவிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டால் அதன் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரேணுகா விசாரணை மேற்கொண்டு சதீஷ் மற்றும் அவரது தாய் தந்தை உடன் பிறந்த சகோதரர் சகோதரி ஆகியோர் மீது   28/07/26 அன்று குற்ற வழக்கு 23/2026.  ப U/s 85, 296(b)  82(1) 351 (1)  316 (2)  318 ( 2)  BNS & 4 of TNPWH  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஆனால் வழக்குப்பதிவு செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் கணவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தனிப்பிரிவு மற்றும்

தென்மண்டல ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரன்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி அவர்களிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தகவல் கொடுத்துள்ளார்.
எது எப்படியோ ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது போல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்கை கடைப்பிடித்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படியோ  ஒரு பெண் புகார் கொடுத்தால் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியும் அந்த சுற்றறிக்கையை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வசந்தா நடவடிக்கை எடுக்காததற்கு  புகார் கொடுத்த பெண்ணின் கணவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தான் நடவடிக்கை எடுக்க மறுக்கிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளதாக புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எது எப்படியோ பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி ஆகியோர் நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களை கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்களின் நடவடிக்கையை.

Related Articles

Back to top button