மாவட்டச் செய்திகள்

40 வருடம் முன்பு தகரத்தில் கூரை போடப்பட்ட ஒரு கடைக்கு 40,000ரூபாய் வாடகை! இல்லை என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் !பேரம் பேசி பல கோடி ரூபாய் நூதன மோசடி ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO ..! அதிர்ச்சி தகவல் !நடப்பது என்ன!?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மையபகுதியில் அமைந்துள்ளப்பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சுமார்  510க்கும் மேலான கடைகளை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய BDO (பொறுப்பு)கண்ணன் சட்டவிதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல் தொகைக்கு ஏல மிடத்திட்டம் போட்டு 2022ஆம் ஆண்டு புதிய நூதன ஊழல் மோசடி செய்ய இறங்கியுள்ளார் என்ற அதிர்ச்சித்தகவல் வந்துள்ளது.

சுமார் 40 ஆண்டுகளாக உசிலம்பட்டி  ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகம் விதித்த வாடகையை தற்போது வரை செலுத்தி கடைகளை நடத்தி வரும் நூற்றுக்கணக்கான சிறுகுறுவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை தற்போது கேள்விக் குறியாக்க நினைக்கும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய BDO  (பொறுப்பு)செயல்படுவதால் அதிர்ச்சியில் வியாபாரிகள்!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்   மாவட்டங்களுக்கும் மையப்புள்ளியாக திகழ்ந்து வரும் பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 510கடைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

ஏலம் எடுத்த சிறு குறு வியாபாரிகளும் சிரிய அளவிலான பொருட்களை மட்டுமே இந்த கடைகளுக்குள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.,

பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் என்பதால் இந்த 400க்கும் அதிகமான கடைகளில் குண்டு மணி பாசி முதல், காய்கறி, பலசரக்கு கடைகள், விவசாயத்திற்கு தேவையான மண்வெட்டி, அருவாள் மனை , துடப்பம் உள்பட மனிதன் இறப்பின் போது செய்யப்படும் சடங்குகளுக்கு பயன்படுத்தும் மண்பானைகள் மாலைகள் வரை அனைத்து வகையான பொருட்களும் ஒரே பகுதியில் கிடைக்கும் அளவு அமைந்துள்ளது.

இந்த கடைகளின் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு வருவாயிலும் ஊராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகைகளை தவறாமல் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.,

ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும் ஊரட்சி ஒன்றிய கவுன்சிலர்களோ,  சேர்மனோ மாறும் போது இந்த கடைகளின் வாடகையை உயர்த்த வேண்டும் மறு ஏலம் விட வேண்டும் என அவ்வப்போது சிறுகுறு வியாபாரிகளை அச்சுறுத்தும் போது மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தை நாடும் சிறுகுறு வியாபாரிகளுக்கு கணிசமான அளவு வாடகையை உயர்த்தி செலுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.,  அப்படி கடைசியாக 3500ரூபாய் வாடகை யை உயர்த்தி அரசு ஆனை வெளியிட்டது.

ஆறு வருடங்களுக்கு ஒரு முறை வாடகையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திய போதும் ஜீஎஸ்டி வரி உள்பட நிலுவை இல்லாமல் வாடகைகளை இந்த சிறு குறு வியாபாரிகள் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது., இந்நிலையில் இந்த 400 க்கும் அதிகமான கடைகளில் 10 சதவீத கடைகள் ஊராட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு மாறாகவும், வாடகை நிலுவையும் வைத்துள்ள சூழலில் அந்த 10 சதவீத கடைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது போன்று மொத்த கடைகளுக்கு மீண்டும் ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தற்போது உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய BDO (பொறுப்பு )வந்திருக்கும் கண்ணன் ஒருகடைக்கு 25லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுங்கள்  இல்லை என்றால் …
கடைக்கு 40,000ரூபாய் வாடகை கேட்டு சட்ட விதிகள் மீறி சட்டவிரோதமாக லஞ்ச ஊழல் நூதன மோசடியில் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த சிறுகுறு வியாபாரிகள் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 9 கடைகளை ஏலத்தின் அடிப்படையில் ஏலம் விடப்பட்ட போது ஆளும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் அழுத்தத்தின் காரணமாக ஒவ்வொரு கடைகளும் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஒரு மாதத்திற்கான வாடகைக்கு ஏலம் எடுத்து அவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது போன்று 400 க்கும் அதிகமான சிறு குறு வியாபாரிகளின் கடைகளையும் ஏல அடிப்படையில் ஏலம் விட்டால் 9 கடைகளை போன்று வாடகையை 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயர்த்தி விட்டால் அனைத்து சிறு குறு வியாபாரிகளின் நிலையும் கேள்விக்குறியாக மாறும் எனவும் கூறுகின்றனர்.

சந்தை கடைகளின் வாடகைகளை உயர்த்தினால் மற்ற தனியார் கடைகளின் வாடகைகளும் உயரும் எனவும் இதனாலேயே விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ள போது நுகர்வோர்களான பொதுமக்கள் பெரிதும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் தலையிட்டு நீதிமன்ற  உத்தரவின் படி உரிய ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட கடைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்படும் சிறு குறு வியாபாரிகளுக்கும் ஆரம்ப காலத்தில் வாடகையை உயர்த்தி வழங்கியது போன்று வாடகையை கணிசமான அளவு உயர்ந்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என சிறுகுறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு சிலுவையில் இருப்பதால் ஒரு சில நாட்களில் நீதிமன்ற உத்தரவுக்கு கடை நடத்தும் வியாபாரிகள் காத்து இருக்கின்றனர் என்ற தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ தமிழகத்தில் தற்போது நல்லாட்சி தந்து கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களில் நற்பெயரையும்  திமுக கட்சியின் செயல்பாடு களையும்  விரும்பாத சில அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பொதுமக்களிடம் திமுக ஆட்சி என்றால் இப்படித்தான் என்று தவறாக பிரச்சாரம் செய்து சித்தரித்து வருவதாக பரவலாகப் பேசப்படுகிறது ஆகையால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சினையை தீர்க்க நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை செய்து பொதுமக்களின்  குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!

.,

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button