7 அடி ஆழம் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து பல லட்சம் மோசடி! கோவை செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்.
https://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzO
https://youtu.be/4lqtqbuFvE4?si=nFsFV67rG-yApJzO
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் செட்டிபாளையம் பேரூராட்சி ஆகும் மொத்தம் 15 வார்டுகளைக் கொண்டதாகும்.
பேரூராட்சி தலைவராக
ரங்கசாமி பதவி வைக்கிறார்.
செட்டிபாளையம் பேருராட்சி கோயம்புத்தூருக்கு தெற்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இரண்டாம் நிலை பேருராட்சியாகும். பல்லடம் – கொச்சி இணைப்பு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேருராட்சியில் லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் உள்ளது. இதனருகே உள்ள பிற நகரங்கள் பொள்ளாச்சி 35 கி.மீ., திருப்பூர் 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஏழு அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு மின் இணைப்பு கொடுத்து பல லட்சம் ரூபாய் பேரூராட்சி நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஆகவே கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாக செயலர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.