சுகாதாரத் துறை

7 லட்சம் பெற்றுக் கொண்டு  முறையான சிகிச்சை அளிக்காததால் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணிப் பெண்!  பழனி பாலாஜி கருத்தரிப்பு மையம் மீது காவல் நிலையத்தில் புகார்!
நடவடிக்கை எடுப்பார்களா சுகாதாரத்துறை  அதிகாரிகள்!?


தமிழ்நாட்டில் சமீபகாலமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது.

ஒவ்வொரு தம்பதியும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது சமூக கட்டாயமாக உள்ளது. எதேனும் உடலியல் குறைபாடுகள் இருந்தாலும், தத்தெடுத்தல் முயற்சிகள் கடைசி தேர்வாகவே உள்ளன. எனவே, செயற்கை முறையில் கருத்தரித்தலுக்கு முயல்கிறார்கள்.
இதை தனியார் கருத்தரிப்பு மையங்கள் வைத்திருக்கும் சிலர் இதை சேவை மனப்பான்மையுடன் செய்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் தனியார் கருத்தரிப்பு மையங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் பயன்படுத்தி இந்த சேவைகள் வழங்கப்படுவதால் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
அதிக கட்டணம் வாங்கும் தனியார் கருத்தரிப்பு மையங்களில் முறையான சிகிச்சை அளிக்காமல் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த காலங்களில்,  ஆறு தனியார் கருத்தரிப்பு மையங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  அய்யம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசன்.  இவரது மனைவி  மகேஸ்வரி(30
ஆண் குழந்தை இல்லாததால்


திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலாஜி கருத்தரிப்பு மையத்திற்கு சென்று

டாக்டர் செந்தாமரை அவர்களை சந்தித்து ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டதற்கு  அதற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும்  தங்களுக்கு ஆண்குழந்தை பெற்றுத் தருவதாகவும்  என மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர் செந்தாமரை உறுதி அளித்ததால் மருத்துவர் செந்தாமரை கூறியதை நம்பி 7லட்சம் ரூபாய் மருத்துவமனையில் கட்டிய பின்பு மனைவி மகேஷ்வரிக்கு செய்திருந்த  கருத்தடையை நீக்கி  
சிகிச்சை அளித்தும் தொடர்ந்து இயற்கையாக கர்ப்பம் தரிக்காததால் மீண்டும் மகேஷ்வரியை  உடல் பரிசோதனை செய்து செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மகேஸ்வரி வயிற்றில் இரட்டைக் குழந்தை உருவாகி ஆறு மாசமாக சிகிச்சை பெற்று வந்த மகேஷ்வரிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்த மகேஷ்வரியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாகவும் அதுவும் உயிரிழந்த நிலையில் இருந்ததால் தாய்க்கு ஏதாவது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனை  மருத்துவர்கள்.  உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுத்து மகேஷ்வரியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்ததற்கு பழனி பாலாஜி மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் மகேஸ்வரியின் உடல் பாதிக்கப்பட்டு வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் இறந்தது என்றும் இதற்கு பழனி பாலாஜி மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பு என்றும் மகேஸ்வரின் கணவர் பழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட

பழனி காவல் துறையினர் பழனி பாலாஜி மருத்துவமனை மருத்துவர் செந்தாமரைச்செல்வி யிடம் விசாரணை செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல்  பாலாஜி மருத்துவமனையில் கட்டிய 7 லட்சம் ரூபாய் மற்றும்  வயிற்றில் இருந்த குழந்தைகள் இறந்ததால் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் பழனி பாலாஜி மருத்துவ நிர்வாகம் மகேஸ்வரி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மகேஸ்வரி கணவர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பழனி பாலாஜி மருத்துவமனை செந்தாமரை செல்வி கூறும்போது 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றும் இரண்டரை லட்சம் ரூபாய் தான் கொடுத்தார்கள் அதுவும் தொடர் சிகிச்சை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால்தான் வயிற்றில் உள்ள குழந்தைகள் இறந்துள்ளதாகவும் இதுபோன்று நடப்பது மருத்துவத்துறையில்
அதற்காக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சிகிச்சை மீது குற்றம் சுமத்துவது  ஏற்கத்தக்கது அல்ல என கூறியுள்ளார்.
எது எப்படியோ
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான  தனியார் கருத்தரிப்பு  மையங்களின் தவறான சிகிச்சை யால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாமல் இருந்து வருகின்றனர் . மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையில் புகார் கொடுக்கின்றனர்.
ஆகவே சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அதிக பணம் வசூல் செய்யும் தனியார் கருத்தரிப்பு மையங்களில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற  தவறுகளை தடுத்து நிறுத்த முடியும் . அதேபோல் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ள பழனி பாலாஜி கருத்தரிப்பு மையத்தில் அதிக பணம் பெற்றுக்கொண்டு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என சுகாதாரத்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிய வந்தால் மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Back to top button