காவல் செய்திகள்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் கொடுத்த நபர் மீது கொலைவெறி தாக்குதல் !
கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை!



தமிழ்நாட்டில் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் (சமூகப் பகிஷ்காரம்) மனிதநேயமற்ற  பழக்கங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும்  இந்த முறையை ஒழிக்க, மாவட்ட ஆட்சியர்கள் (District Collectors) நேரடியாகத் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது மற்றும் அவசரமானது ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தில் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், இத்தகைய ஒடுக்குமுறைகளை மாற்றவும்
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் (Taluk) வட்டாட்சியர் (Tahsildar) தலைமையில் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமத்துவக் குழுக்களை அமைத்து, சமூக நல்லிணக்கத்தை வாராந்திர அல்லது மாதாந்திரக் கூட்டங்கள் மூலம் கண்காணிக்க  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் அந்த உத்தரவை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் காற்றில் பறக்கவிட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதை கண்டு கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதுதான் நிதர்சனமான உண்மை.

இதற்கு உதாரணமாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வெள்ளாள வயல்
கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து ,பெரியசாமி ராஜா  பாக்கியராஜ் ஆகிய நான்கு பேரும்

21/ 9 / 2026 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில்

வெள்ளாள வயல் ஊரைச் சேர்ந்த குழந்தைவேலு த/பெ கூத்தையா சேர்வை அவர்கள் எங்கள் ஊரில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கும் மற்றும் அருகில் உள்ள காடங்குடி கிழக்கு ஈச்சம்  பொட்டல் கிராமத்தில் சிலரிடமும் நிலங்களை சுமார் 40 லட்சத்துக்கு ரூபாய்க்கு மேல் விற்று பணம் வாங்கியுள்ளார் இந்த விவரம் தெரிந்து அவரிடமிருந்து நிலங்கள் விற்று பணம் எல்லாம் எங்கே என்று கேட்டதற்கு நீ எல்லாம் பள்ளப்பயல் நீ எல்லாம் என்னிடம் கேள்வி கேட்க முடியாது நான் உன்னிடம் பதில் சொல்ல தேவையில்லை என்று எங்களின் சாதியை சொல்லி இழிவாக பேசி மீண்டும் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டால் உங்களை எல்லாம் ஊரை விட்டு விரட்டி விடுவேன் என்றும் கருப்பையா என்கின்ற நாகூரான் தகப்பனார் பெயர் குப்பன் என்பவரை வைத்து தூண்டுதல் செய்து என் வீட்டிற்கு வந்து நான் வாங்கிய இடத்தில் உள்ள அனைத்தையும் பிடுங்கி உடைத்தும் எண்ணையும் என் குடும்பத்தையும் தகாத  வார்த்தைகளால் பேச வைத்தார்.
மேலும் எண்ணையும் என் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி உறவினர்களை வைத்து சத்தியம் செய்து எனக்கும் என் குடும்பத்துக்கும் பிரச்சனை செய்யச் சொல்லி தூண்டுதல் செய்து வருகிறார் .

மேலும் கடந்த மூன்று வருடங்களாக என்னையும் என் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்.

ஊர் கிராம கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என்றும் ஒதுக்கி வைத்திருந்தனர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் கொடுத்த நிலையில் அந்த புகார் மீது

ஆவுடையார் கோவில் வட்டாட்சியர்  சசிக்குமார் மற்றும் ஏம்பல் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை நேர்மையான முறையில் நடத்தாத வட்டாட்சியர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் இரண்டு  பிரிவினர்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கி  புகார் கொடுத்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அந்த நபர் தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்.
ஆகவே கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் தாக்குதல் நடத்த தூண்டிய ஊர் தலைவர் ஆகியோர் மீது  விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு எங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் கொடுத்துள்ளார். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல்  மாறாக புகார் கொடுத்து நபர் தாக்குதலுக்கு உள்ளாகி 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேர் மீது  பொய் வழக்கு பதிவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சட்ட ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாக புகார் கொடுத்தால் அந்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆகவே

புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

• ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் மக்களை ஒதுக்கி வைப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17-ன் படி (தீண்டாமை ஒழிப்பு) குற்றமாகும். இது போன்ற புகார்கள் வந்தவுடன், SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் அல்லது உரிய பிரிவுகளின் கீழ் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
• பாதிப்புக்குள்ளான கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். அதிகாரிகளின் நேரடி வருகை ஒடுக்குமுறையாளர்களிடம் பயத்தையும், பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

கிராம ஊராட்சிகள் தோறும் சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். ஊர் கட்டுப்பாடு விதிப்பதும், வாழ்வாதாரத்தைத் தடுப்பதும் சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  செயல்பாட்டை…

Related Articles

Back to top button