சிபிஎஸ்சி அங்கீகாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போலி விளம்பரம் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கல்வி கட்டணம் வசூல் செய்து மெகா மோசடி!
மயிலாடுதுறை அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம்) கோமாவில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்!

மயிலாடுதுறை
மேலையூர் காவேரி நகர் பூம்புகார் பிரதான சாலை நம்பர்.3. என்ற இடத்தில்

அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம் ) என்ற தனியார் பள்ளி கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கண்ணன் என்பவர் இந்த பள்ளியின் நிறுவனர் ஆவார்.
ஆனால் இந்தப் பள்ளி 2008 இல் ஆரம்பிக்கப்பட்டபோது ப்ரீகேஜிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்டது அப்போது 100 மாணவர்கள் அந்த பள்ளியில் படித்ததாக கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு க்கு பின்பு ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டதாகவும் புறப்படுகிறது.
இந்த இந்தப் பள்ளி மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் மட்டுமே பெற்றுள்ளதாகவும் ஆனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் CBSE அங்கீகாரம் பெற்ற பள்ளி என தவறாக சித்தரித்து

20 ஏக்கர் இடத்தில் பள்ளி இருப்பதாக போலி ஆடம்பர விளம்பரங்கள் செய்து


மாணவர்களின் பெற்றோர்களிடம் பல லட்சங்கள் கல்வி கட்டணத்தை வாங்கி ஏமாற்றி மெகா மோசடி செய்து வந்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாநில கல்வி பாடத்திட்டத்தில் அதாவது (மெட்ரிகுலேஷன் )
அனுமதியை பெற்று விட்டு மாணவர்கள் சேர்க்கையின் போது
CBSE பாடத்திட்டம் என்று பொய் சொல்லி ஏமாற்றி கடந்த 18 ஆண்டுகளாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இதுவரை பல கோடி ரூபாயை கல்விக்கட்டணம் என்ற பெயரில் மோசடி செய்து கொள்ளையடித்துள்ளனர்.

.இத்தனை ஆண்டு காலம் அழகு ஜோதி அகாடமி என்ற தனியார் கல்வி நிறுவனம்… ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்க… மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் முறைகேடாக நடத்தி வந்த பள்ளி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு கண்டு கொள்ளாமல் இருந்தது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயமாகும். பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கும் இந்த பள்ளிக்கு வழங்கியுள்ள அனுமதியை உடனே ரத்து செய்ய பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்னவென்றால்
இந்தப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் குழந்தைகளும் படித்து வருகிறது என்பது தான் வேடிக்கையானது.
CBSE பாடத்திட்டம் இல்லை… இந்த கல்வி நிறுவனம் மாநில கல்வி பாடத்திட்டத்தில் தான் இயங்கி வருகிறது என்ற தகவல் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில்.
(20.03.2025) இரவு அந்த கல்வி நிறுவனத்தை முற்றுகையிட்டு… பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில்* ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பெற்றோர்கள் சார்பில்…. முறைகேடு செய்துள்ள மேற்கண்ட கல்வி நிறுவனத்தின் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறும்…
அந்தக் கல்வியில் நிறுவனத்தை இழுத்து மூடுமாறும்…இத்தனை ஆண்டு காலம் பெற்றோர்களிடம் பொய் சொல்லி மாணவர்களின் பெற்றோர்களை ஏமாற்றி வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள பணத்தை மீட்டு தருமாறும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதன் பேரில் பெற்றோர்கள் தற்காலிகமாக மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
எது எப்படியோ தங்கள் பிள்ளைகளை எப்படியாவது நல்ல பள்ளியில் சேர்த்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என எண்ணத்தில் இது போன்ற போலியான ஆடம்பர விளம்பரங்களை நம்பி தங்களது குழந்தைகளை சேர்த்து வருவதை சாதகமாக பயன்படுத்தி
கல்வியை வியாபாரமாக மாற்றி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் ஒரு சில தனியார் பள்ளிகளின் மீது அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாமல் கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணத்தால் தான் இது போன்ற தொடர் மோசடியில் பள்ளிகள் செயல்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.




