லஞ்ச ஒழிப்புத் துறை

FL. 2  மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை!
7000 ரூபாய் மாமூல் வாங்கிய  திண்டுக்கல் தாலுகா உதவி காவல் ஆய்வாளரை கைது செய்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை!

திண்டுக்கல் FL. 2  மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை !
7000 ரூபாய் மாமூல் வாங்கிய  திண்டுக்கல் தாலுகா உதவி காவல் ஆய்வாளரை கைது செய்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை!

தமிழகத்தில் மதுவிலக்கு துறை தகவல் படி   125 எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்படுகிறது. என கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மதுவிலக்கு காவல்துறை  கூறுவதை விட தமிழகத்தில் கூடுதல் எப்எல்- 2 மதுபான கூட்டத்திற்கு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அதிகமாக செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனால்
எப்எல்-2 உரிமம் பெற்று நடத்தப்படும் மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பாக எப்எல்-2 மதுபான கூடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல்
FL-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான மதுபான கூடங்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.
மதுபான கூடங்களில் சட்டவிரோத மது விற்பனை செய்யும்  மதுபான கூடம் நடத்துவோரிடம் மதுவிலக்கு காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக
திண்டுக்கல் மாவட்டத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும். அது மட்டுமில்லாமல்
மது விற்பனைக்கு ரசீது வழங்குவதில்லை என்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் திண்டுக்கல் மாவட்டத்தின் தற்போதைய கலால் உதவி ஆணையர் பால்பாண்டி(Assistant Commissioner – Excise) . மற்றும் புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என
சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

ஆனால்  சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக எஃப் எல் 2 மனம் மகிழ் மன்றத்தின் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் கலையரசனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதாகும் சுகுமார் என்பவர்

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனமகிழ் மன்றம்  FL.2  பார் நடத்தி வருவதாகவும்
அந்த( FL.2 மதுபானக்கூடம்)மன மகிழ் மன்றத்திற்கு

திண்டுக்கல்  தாலுகா காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கலையரசன்  சென்று
பாரில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக தொடர்ந்து  புகார் வருகிறது .
புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டும் இல்லையென்றால் எஃப் எல் 2  அனுமதி ரத்து செய்ய  வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டும் வகையில்  பேசி உள்ளார்.

இதைக் கேட்ட சுகுமார் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் அதற்கு மாதம் ரூ.7 ஆயிரம் கொடுக்கும்படி காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாராம்.
இந்த நிலையில் மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகுமார்

திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய டிஎஸ்பி நாகராஜன் புகாரில் உண்மை தன்மையை உறுதி செய்ய முடிவு செய்தார்.., கலையரசனை கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்தார். அதற்காக ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் இடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதனை எடுத்து அந்த
பணத்தைப் பெற்றுக்கொண்ட சுகுமார், இரவு 7 மணி அளவில் கலையரசனை செல்போனில் தொடர்புகொண்டு  திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தால் பணத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கலையரசனும் அவர் கூறிய இடத்துக்கு சாதாரண உடையில் வந்துள்ளார்.
அவர் வருவதற்கு முன்பே லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா மற்றும் போலீசார் அங்கு மறைந்திருந்தனர்.
சுகுமார், வைத்திருந்த ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலையரசனிடம் கொடுத்துள்ளார்.
அதை கலையரசன் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கலையரசனை கையும், களவுமாகப் பிடித்துள்ளனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து கலையரசன் தப்பியோட முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து அவரை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணைக்காக தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு ரசாயன கரைசலுடன் இருந்த கண்ணாடி பாட்டிலில் கலையரசனின் கைவிரல்களை நனைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அப்போது தனது கைகளில் இருக்கும் தடயத்தை அழிக்க நினைத்த கலையரசன், கண்ணாடி பாட்டிலை வலது கையால் தாக்கி உடைத்தாராம். அப்போது அவருடைய கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்த மற்றொரு கண்ணாடி பாட்டிலையும் கலையரசன் உடைத்தாராம்,
உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து இடது கையில் தேய்க்க முயன்றார். இதைக் கவனித்த போலீஸ் டிஎஸ்பி நாகராஜ் அவரைத் தடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இடது கையில் கண்ணாடித் துண்டுகள் கீறியதில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் இருவருக்கும் சிகிச்சை கொடுத்தனர். இதையடுத்து கலையரசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து  அவரை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
மாமுல் வாங்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

Related Articles

Back to top button